[ புதன்கிழமை, 08 யூலை 2015, 04:31.00 PM GMT ]
தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வினை முன்னிட்டு இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் நாய்கள், காகங்களாக பிறப்பார்கள் என நிசங்கமல்ல ஆட்சிக் கால ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஓலைச் சுவடி இன்றைக்கும் பொருத்தமானது என கருதுகின்றேன்.
இதனால் குறித்த ஓலைச் சுவடியை அரசாங்க நிறுவனங்களின் முன் காட்சிப்படுத்துவதனால் நல்ல பலனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசி கட்சி சார்பில் கல்குடா தொகுதிக்கு கிழக்கு மாகாண பொலிஸ் பணிப்பாளர் சாமித்தம்பி தேர்தல் களத்தில்!
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 06:12.02 PM GMT ]
இவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்க்குடி ஆகிய பிரதேசங்களுக்கு உதவி அரசாங்க அதிபராகவும், மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளராகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவித்தி திட்ட மட்டக்களப்பு மாவட்ட திட்டப்பணிப்பாளரும் (நெற்டெப்) கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக தற்பொழுது வரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் தெரிவானது இழுபறி நிலை ஏற்பட்டபோதும் மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.
அதனடிப்படையில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், ரெலோ சார்பாக மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும், புளோட் சார்பாக ச.வியாழேந்திரன் (அமல்) ஆசிரியரும், வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இலங்கையின் பொறுப்புகூறும் விடயத்தில் அமெரிக்காவின் அழுத்தம் தேவை; முதலமைச்சர்
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 07:10.47 PM GMT ]
அமெரிக்காவும், சர்வதேச நாடுகளும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வழங்கும் ஒத்துழைப்புகளை நினைவுபடுத்திய அவர், அதேபோன்று, பொறுப்புக்கூறும் விடயத்திலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.
இலங்கையில் மீள் இணக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி மீள்குடியேறவும், இராணுவப் பிரசன்னத்தை குறைப்பதற்கும், பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தவும், அமெரிக்கா தொடர்ந்தும் வற்புறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறும் நிலைமையில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவில் வைத்து முதலமைச்சர் கூறியுள்ளார்.
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் 6 வருடங்கள் அனுமதிக்கக்கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTcSUev4D.html
Geen opmerkingen:
Een reactie posten