தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 juli 2015

சுமந்திரனுக்கு ஆப்புவைத்த பருத்திதுறை மக்கள்: சுமந்திரன் கடும் அதிர்ச்சி !

அம்பாறையில் கூட மகிந்தவுக்கு ஆதரவு: செல்ஃபி எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள் !

[ Jul 27, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 8640 ]
அம்பாறை மாவட்டத்தில் நேற்று மகிந்த ஒரு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிகழ்த்தினார். இதில் பல நூறு பேர் கலந்துகொண்டு மகிந்தருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். நான் நீ என முண்டியடித்துக்கொண்டு அவர்கள் மகிந்தரோடு இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். இதனைப் பார்த்த பலர் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்கள். இதுபோக தான் அதிகாரத்திற்கு வந்தால் 18 வயது முதல் 30 வயது வரையான இளைஞர்களுக்கு 50,000 ரூபா மற்றும் வௌிநாடு செல்ல கடன் தொகை என்பன பெற்றுக் கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் 6000 ரூபா வரை மஹபொல புலமைப்பரிசிலை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமந்திரனுக்கு ஆப்புவைத்த பருத்திதுறை மக்கள்: சுமந்திரன் கடும் அதிர்ச்சி !

[ Jul 27, 2015 04:47:37 AM | வாசித்தோர் : 29170 ]
நேற்று மாலை(ஞாயிறு) பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர். அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார்.
மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ் மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால் வந்த வினையா ? அல்லது இலங்கையின் சுதந்திரதின நிகழ்வை இதுவரை காலமும் புறக்கணித்து வந்த தமிழ்த் தலைமைகள் எல்லோரையும் புறந்தள்ளி வைத்துவிட்டு சொறி நாய் போல் அங்கு போனதால் வந்த வினையா?
அல்லது தனக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கும் கள்ளத் தொடர்புகளை மக்கள் அறிந்துவிட்டார்கள் என்றதால் வந்த வெளிப்பாடா? எனத் தெரியாது சுமந்திரன் குழம்பி நின்றதாக அங்கு சென்ற கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/4285.html

Geen opmerkingen:

Een reactie posten