கருணா விற்கு பொதுஜனஐக்கியமுன்னணி தேசியப்பட்டியலில் இடம் கொடுக்காது விட்டவுடன் ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று கருணாவைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு கருணா.
தனது ஆதங்கங்களைத் தெரிவித்து கவலைப்பட்டுள்ளான். அப்போது அவன் தெரிவித்த கருத்துக்கள் தற்சமயம் சிங்கள இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றது. அதில் ஒரு பகுதி இதோ
எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் சம்மந்தன் நேர்மையான அரசியல்வாதி. ஜதார்த்தமாக அவர் செயற்படுகின்றார்.
சுமந்திரனும் தமிழர்களுக்காக சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க ஆசைப்படுகின்றார்.
ஆனால் அதனை இல்லாது செய்வதற்கு புலிகளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சிலர் முயன்று கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை நான் சொல்லுவதால் நான் கூட்டமைப்புக்கு ஆதரவாகக் கதைப்பவன் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.
கூட்டமைப்பின் தலைவரிடம மகிந்தவும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது எனக்கத் தெரியும். சம்மந்தனுக்கு புலிகளைக் கண்டேலே அலர்ஜி.
இருந்தும் புலிகளின் ஆயுதத்தால் தனக்கும் ஏனைய மென்போக்கு அரசியல்வாதிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றே புலிகள் சொல்வதைக் அவர் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு அப்போதே தெரியும்.
புலிகள் அழித்தொழிக்கபபட்டதால் தற்போது தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். இறுதியுத்தத்தில் பிரபாகரனைப் படையினர் உயிருடன் பிடித்தது நுாறுவீதமான உண்மை.
ஆனால் பிரபாகரன் எவ்வாறு உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் என்னைக் கொண்டு சென்று காட்டினார்கள்.
பிரபாகரன் கடுமையான சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. பிரபாகரன் இறந்ததை நம்பாத சுரேஸ்பிரேமச்சந்திரனும் இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களும் என்னை அனுகி ‘அச் சம்பவம் உண்மையா‘ எனக் கேட்ட போது எனக்கு சிரிப்பாக இருந்தது.
பிரபாகரனின் உடலைப் பார்த்தவுடன் எனக்கு தாங்கமுடியாத அழுகை ஏற்பட்டது. இருந்தும் அடக்கிக் கொண்டேன். சிறிது நேரத்திலேயே நான் நோமல் நிலைக்கு வந்துவிட்டேன்.
ஏனெனில் இனிமேல் தமிழ்ச் சனம் அமைதியான முறையில் இருக்கும் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே.
பிரபாகரனை உடலாகப் பார்த்த ஓரிரு நாட்களின் பின்னர், பிரபாகரனை உயிருடன் மகிந்தராஜபக்சவிடம் இழுத்துக் கொண்டு வந்ததாகவும் மகிந்த பிரபாகரன் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் முக்கிய சிங்கள அமைச்சர்கள் இருவரால் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
நான் இது தொடர்பாக ஒரு சமயம் மகிந்தவிடம் நேரடியாகவே கேட்டேன். மகிந்த ஒரு புன்முறுவலை மாத்திரம் அதற்குப் பதிலாகத் தந்துவிட்டு வேறு விடயங்களுக்கு கதையை மாற்றியதால் நான் அதன் பின்னர் இது பற்றிக் கேட்கவில்லை.
பிரபாகரன் தனது மனைவியையும் மகளையும் உயிருடன் படையினரிடம் அகப்பட வைத்தது அவரது முழு முட்டாள்தனம்.
பிரபாகரன் மனைவியையும் பிள்ளையையும் இறுதி யுத்தத்தின் போது தன்னுடன் வைத்திருந்துள்ளதை நானே நம்பவில்லை.பின்னரே எனக்கு எல்லாம் தெரிந்தது.
சரணடைந்த முக்கிய தளபதிகள் நாய்க்குட்டிகள் போல எங்கள் கால்களின் கீழ் உயிருடன் கிடந்தார்கள் என முக்கிய படையதிகாரி தெரிவித்த போது எனக்கு குறித்த சரணடைந்த தளபதிகள் மீது கடும் கோபம் ஏற்பட்டது.
என்னைத் துரோகியாக கூறியவர்களே படையினரிம் இவ்வாறு சரணடந்தவர்கள் எனத் தெரி்ந்ததால் அவர்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten