[ வெள்ளிக்கிழமை, 10 யூலை 2015, 03:11.19 PM GMT ]
யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மதியாபரணம் சுமந்திரன் ஆகியோர் இன்று பிற்கல் 2.45 மணியளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்றார்.
யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மதியாபரணம் சுமந்திரன், என்.சிறீகாந்தா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் (பருத்தித்துறை, பிரதேசசபை அங்கத்தவர்), ந.அனந்தராஜ் (முன்னாள் தலைவர், வல்வெட்டித்துறை நகரசபை) ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்: இரா. சம்பந்தன்
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 12:04.16 AM GMT ] [ பி.பி.சி ]
நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா.சம்பந்தன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், உதிரிகளைத் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்.
ஜனநாயக விடுதலைப் போராளிகளாக போட்டியிடும் முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyHSVSUexyH.html
Geen opmerkingen:
Een reactie posten