[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:29.57 PM GMT ]
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்று இரவு சந்திக்கவுள்ளனர்.
இதன்போது மஹிந்த ராஜபக்சவின் வேட்பு மனு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை சுசில் பிரேமஜயந்த இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுக்குழுவினரை சந்தித்தார்.
இதன்போது மஹிந்த ராஜபக்சவுக்கான வேட்புமனுவை மைத்திரிபால திரும்பிப் பெறப்போவதாக தெரிவித்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மைத்திரிபால, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்காது போனால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அங்கு தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தை குளிர வைத்த மைத்திரி அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:41.50 PM GMT ]
தற்போதைய மைத்திரி அரசாங்கத்தின் முடிவினால் சீன அரசாங்கம் மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் முடிவிற்கு பின்னர் இலங்கையின் புதிய அரசாங்கம் சீனாவின் தலையீடுகளையும், அபிவிருத்தி நடவடிக்கைகளையும் சற்றுக் குறைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங்கிடம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களுக்கு சீனத் தூதரகப் பேச்சாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
90 கி.மீ நீளமான இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தில் சீன எக்சிம் வங்கி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 15 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதுடன் பயண நேரமும், 3 மணித்தியாலங்களில் இருந்து 40 நிமிடங்களாக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும். இந்த திட்டத்துக்கு 2 வீத வட்டியுடன், 1.7 பில்லியன் டொலரை சீன எக்சிம் வங்கி வழங்கவுள்ளது.
இந்தக் கடனை 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பேசப்படாமல் இருந்த இத்திட்டத்தின் பேச்சை இப்பொழுது ஆரம்பித்து கைச்சாத்திட்டமையை சீனா மதிப்பதாகவும், இதன் மூலம் தாம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் அடிவருடிகள் மக்களால் சங்கரிக்கப்படுவார்கள்! பொன்.காந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 09:11.24 PM GMT ]
இதில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவர் பொன்.காந்தன் உரையாற்றுகையில்,
எமது மக்கள் எப்பொழுதுமே உறுதியும் கொள்கையும் உடையவர் என்பதை பெரும் போர் முடிவடைந்து அதில் தங்கள் உடல்பொருள் ஆவியனைத்தையும் இழந்து நின்றபோதும் எதிர்கொண்ட தேர்தல்களின்போது இந்த உலகத்திற்கு அறிவித்தார்கள்.தமிழர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவன் தேர்தல்களில் எப்பொழுதும் சொல்லி வந்திருக்கின்றான். ஆனால் இனவாதத்தோடு எமது உணர்வுகளை எதிர்கொள்ளும் தெற்கு அரசாங்கங்கள் அந்த நீறுபூத்த நெருப்பாய் கிடக்கும் வேடகைகளை புரிந்துகொள்ளாது அதை தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்தனத்தை தமிழர்கள் மீது திணிக்க முனைந்தன் விளைவுதான் கடந்த ஜனவரி எட்டாம் திகதி தேர்தலில் தமிழன் ஒரு சங்காரத்தை நிகழ்த்தினான். அதில் தான் என்றுமே வீழ்த்த முடியாத மன்னன் என்று எக்காளமிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த வீழ்த்தப்பட்டார்.
அந்த தேர்தலில் சிங்கள தேசத்தின் மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களின் வாக்குகளே தீர்மானித்தது. கடந்த முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழன் என்ற ஒரு இனம் இம்மண்ணில் இனி இருக்கக்கூடாது என்றும் அப்படி இருந்தால் அவன் ஒரு அடிமைப்பிராணியாக இருக்கவேண்டும் என்றே மகிந்தவின் கொலை வெறி அரசாங்கம் நினைத்து எமது மக்கள் மேல் ஈவு இரக்கமின்றி இனப்படுகொலையை மேற்கொண்டது. ஆனால் துரதிஸ்ட வசமாக தமிழர்கள் மிச்சமாக நெருப்பின் எச்சமாக மீண்டும் மண்ணில் காலூன்றியது. ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.
சர்வதேசம் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழர்களின் ஜனநாயக பலத்தை அதன் எதிர்பார்பை உன்னிப்பாக கவனிக்கின்றது. அதை எமது மக்கள் தங்கள் விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாக கருதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடாக பார்க்கின்றது. மகிந்தவின் அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பெரும் மானுட அவலத்தை மறைக்க எமது மக்களுக்குள் இருக்கும் புல்லுருவிகளையும் கோடரிகாம்புகளையும் பயன்படுத்தி ஒரு மாயை எமது தாயகத்தில் உருவாக்க முனைந்தது. அதற்கு வடக்கின் வசந்தமென்றும் அபிவிருத்தி என்றும் போர்வைகளை போர்த்தி தங்கள் பக்கம் எமது மக்களின் சிந்தனைகளை திசை திருப்ப பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்து. போரில் யாவற்றையும் இழந்து வலிகள் சுமந்த எமது மக்களின் வறுமையையும் இயலாமையையும் தங்கள் இனவாத ஆட்சிக்கும் அடிவருடும் தனத்துக்கும் மூலதனமாக்கி அவர்களை சிங்கள கட்சிகளுக்கும் சின்னத்துக்கும் வாக்களிக்க பலிக்கடாக்கள் அதீத முயற்சிகளை மேற்கொண்டது.
அன்பு மக்களே! வடக்கிலே இருக்கின்ற ஒரு அடிவருடி கூட்டம் மத்தியிலே வாலாட்டி மாநிலத்தில் தலையாட்டி என்று செய்த பித்தலாட்டங்களை நீங்கள் அறிவீர்கள்.முள்ளிவாய்க்காலில் லட்சத்துக்கு மேல் தமிழர்கள் கொல்லப்பட்டதை இந்த உலகமே பார்த்து கழிவிரக்கம் கொள்ளும் நிலையின் மகிந்தவோடு அடிவருடிய வடக்கின் அடிவருடிக்கூட்டம் முள்ளிவாய்க்காலில் எந்த கொலைகளுமே இடம்பெறவில்லை இங்கு மக்கள் சாகவில்லை என்று ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தியதையும் அடிவருடிக்கூட்டத்தின் தலைவன் ஐ.நா.சபை வரை போய் மகிந்தவுக்கு சார்பாக வாலாட்டியதை மக்களே நினைவில் கொள்ளுங்கள்.
எப்பொழுது இந்த அடிவருடிகளை இந்த மண்ணில் இருந்து நாம் அகற்றுகின்றோமோ அன்றும் எங்கள் விடுதலை நாள்தான். அதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் வரும் தேர்தல். இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கு மக்கள் முழுமையாக வாக்களித்து அடிவருடிகளை சங்கரித்து இந்த அரங்கில் இருந்து அகற்றவேண்டும். எமது தமிழ் மக்களின் பலத்தை சிதறடிப்பதற்கு எங்கள் மக்களை வைத்தே சூழ்ச்சிகள் இன்றும் நடக்கின்றது. நீங்கள் இதில் தெளிவாக இருப்பீர்கள் என நம்புகின்றோம். கயவர்கள் எமது மக்களின் மனதை தமிழ் தேசிய சிந்தனையில் இருந்து மாற்றுவதற்கு பணத்தையும் பதவி ஆசைகளையும் அற்ப சலுகைகளையும் வாரியிறைத்தபோதும் எமது மக்கள் தேர்தல் ஒன்று வருகின்றபோது மண்ணுக்காய் மடிந்தவர்களை நினைக்கின்றார்கள்.
கொள்கை குன்றிடா தலைவனை நினைக்கின்றார்கள். அவன் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்மைப்பை நினைக்கின்றார்கள். இம்முறையும் இதுவரை இல்லாத அளவு பாரிய திருப்பத்தை இந்த தேர்தல் மூலம் ஏற்படுத்தவேண்டும். அதன் மூலம் அடிவருடிகள் அகற்றப்படவேண்டும். சிங்கள தேசத்தின் அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக எமது மக்களின் தீர்ப்பு அமையவேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTbSUeu7G.html
Geen opmerkingen:
Een reactie posten