தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 juli 2015

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா! சாட்சி கையெழுத்திட்ட மைத்திரி

மைத்திரியிடமிருந்த வேட்பு மனு கிடைக்காத 33 பேரின் விபரங்கள் அம்பலம்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 04:50.43 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதி உட்பட 33 பேர் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு வேட்பு மனு வழங்காமைக்கான காரணமும் ரகசியமாக வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியல்,
01. மஹிந்த ராஜபக்ச (ஊழல் மோசடி குற்றச்சாட்டு)
02. பசில் ராஜபக்ச (திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி மற்றும், தரகு பணம் பெற்றுக்கொண்டமை)
03. நாமல் ராஜபக்ச (நிலப்படை குற்றங்கள், நிதி குற்றங்கள்)
04. மஹிந்தானந்த அலுத்கமகே (நிதி முறைக்கேடு, ஊழல் மோசடி)
05. ரோஹித்த அபேகுணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
06. துமிந்த சில்வா (போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடி)
07. டிலான் பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
08. எஸ்.எம்.சந்தரசேன (இலஞ்ச ஊழல் மோசடி)
09. ரஞ்சித் சொய்சா (இலஞ்ச ஊழல் மோசடி)
10. மனுஷ நாணயக்கார (இலஞ்ச ஊழல் மோசடி)
11. லோஹான் ரத்வத்தே
12. உதித்த லொகுபண்டார (இலஞ்ச ஊழல் மோசடி)
13. சந்திம வீரக்கொடி
14. மேர்வின் சில்வா (இலஞ்ச ஊழல் மோசடி)
15. பந்துல குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி கணணி கொள்வனவில் மோசடி)
16. விமல் வீரவன்ச (இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் போலி ஆவணங்கள்)
17. சஜின் வாஸ் குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
18. சரன குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
19. பிரேமலால் ஜயசேகர (இலஞ்ச ஊழல் மோசடி)
20. லக்ஷ்மன் வசந்தர பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
21. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (இலஞ்ச ஊழல் மோசடி)
22. டலஸ் அழகப்பெரும (இலஞ்ச ஊழல் மோசடி)
23. நிஷாந்த முத்துஹெட்டிகம
24. வாசுதேவ நாணயக்கார
25. ஜீ.எல்.பீரிஸ்
26. கெஹெலிய ரம்புக்வெல்ல (இலஞ்ச ஊழல் மோசடி)
27. சரத் குமார குணரத்ன (இலஞ்ச ஊழல் மோசடி)
28. பிரசன்ன ரணதுங்க (இலஞ்ச ஊழல் மோசடி)
29. உதய கம்மன்பில (இலஞ்ச ஊழல் மோசடி)
30. விதுர விக்ரமநாயக
31. குமார வெல்கம (இலஞ்ச ஊழல் மோசடி)
32. திலும் அமுனுகம
33. மஹிந்த யாப்பா அபேவர்தன


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகிர்வு கூட்டம் வவுனியாவில்!
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:03.53 AM GMT ]
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு 5மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலை சந்திக்கும்
தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தலை சந்திக்க தீர்மானித்துள்ளதாகவும், கட்சிகளுக்கான ஆசன பங்கீடு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் காலை 11 மணி தொடக்கம் மாலை 7 மணி வரையில் பேசியிருந்தோம். குறிப்பாக ஆசனப் பங்கீடு தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலும் பேசியிருத்தோம். ஆசனப் பங்கீடு சுமூகமான முறையில் முடிவுக்கு வந்திருக்கின்றது
மேலும் முன்னாள் போராளிகள் சிலர் இன்றைய கூட்டத்தில் ஆசன ஒதுக்கீடு கேட்டிருந்தார்கள். எனினும் அதனை பரிசீலிக்க இது நேரமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இந்நிலையில் தாம் மக்களோடு பேசுவதாக கூறிச் சென்றுள்ளார்கள்.
இதன்படி,
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 6
ஈபிஆர்எல்எவ் - 2
புளொட் 1
ரெலோ 1
வன்னி மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 3
ரெலோ 3
ஈபிஆர்எல்எவ் - 2
புளொட் - 1
மட்டக்களப்பு மாவட்டம்
தமிழரசுக்கட்சி –5
ஈபிஆர்எல்எவ் - 1
புளொட் 1
ரெலோ 1
அம்பாறை மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 5
ஈபிஆர்எல்எவ் - 2
ரெலோ 2
புளொட் 1
திருகோணமலை மாவட்டம்
தமிழரசுக் கட்சி - 4
ஈபிஆர்எல்எவ் - 1
ரெலொ- 1
புளொட்-1
http://www.tamilwin.com/show-RUmtyHTaSUet7G.html

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ?
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:37.49 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க இதுவரையில் பெயரிடப்பட்டுள்ள போதிலும், கட்சியின் சார்பில், சஜித் பிரேமதாஸவை பெயரிடுவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கட்சி உறுப்பினர்களின் இரகசிய பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற 29 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளமையும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி ஒரு போதும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியோ அல்லது அவரை முன்னிலைப்படுத்தி கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் வெற்றியோ அல்ல.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டால் அவருக்கு முகவரியாக இருப்பது கிராமத்து மக்களாகும்.
எனவே பெரும்பான்மை கிராம மக்கள் அவரை சுற்றியிருப்பதனை தடுக்க முடியாத ஒன்றாக உருவாகியுள்ளதென உறுப்பினர்களின் கருத்தாக காணப்படுகின்றது.
இக்காரணத்தினால் கிராம மக்களை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இணைத்துக்கொள்வதற்கு தகுதியான ஒருவர் சஜித் பிரேமதாஸ என கட்சி உறுப்பினர்களின் எண்ணமாகும்.


திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா! சாட்சி கையெழுத்திட்ட மைத்திரி
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 08:02.34 AM GMT ]
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவரே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார்.
திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு 20 பேருக்கு உட்படவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten