தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 juli 2015

தமிழர்கள் வாழ்ந்த பல எல்லைக்கிராமங்களில் இதுவரை எந்த அபிவிருத்தியும் இல்லை: சுவிஸ் அன்பே சிவம் நிகழ்வில் த.கலையரசன்

மஹிந்தவுடன் மைத்திரி இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும்!- வசந்த சேனாநாயக்க
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 01:44.05 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த மைத்திரி இணைந்து கொண்டதாக வெளியான தகவல்கள் பற்றி எனக்குத் தெரியாது. இருவரும் இணைந்து கொண்டிருந்தால் அதற்காக மஹிந்தவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
அதேபோல் இவ்வாறு வெட்கம் கெட்ட செயலை ஏன் செய்தீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கேட்கின்றேன்.
நாம் ஊருக்கு செல்லும் போது மக்கள் கேட்கின்றார்கள் இருவரும் இணைந்து கொண்டார்களா என?
ஊடகங்களில் கூறுவதனைப் போன்று மஹிந்த இணைந்து கொண்டிருந்தால் அவரை குற்றம் சுமத்த முடியாது, அதற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.
கடந்தவாரம் மஹிந்தவுடன் இணையப் போவதில்லை, வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
தேர்தல் காலத்தில் போதைப் பொருள் எதனோல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி மைத்திரி கூறினார். மஹிந்தவின் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களை தாங்கிக் கொள்ள முடியாது தாம் வெளியேறியதாக கூறியிருந்தார்.
மனிதர் என்ற ஒர் கொள்கை இருக்க வேண்டும்.
எனினும் யார் எங்கு சேர்ந்தாலும் பிரிந்தாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும் என வசந்த சேனாநாயக்க பொலனறுவையில் வைத்து நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTaSUet6A.html



விடுதலைப் புலிகளுடன் பேச்சு தொடர்ந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்!- ரணில்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 02:41.36 AM GMT ]
2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்திருந்தால், போரின் மூலம் இழக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
சந்திரிகா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
போர் நிறுத்த உடன்பாட்டின் கீழ் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்ட போது சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை புரிந்துக்கொள்ளவில்லை.
2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முரண்பாடுகளுக்கு மத்தியில் தேசியப்பிரச்சினை தொடர்பில் செயற்படமுடியும் என்று தாம் நினைத்த போதும் அது தோல்வியடைந்தாக ரணில் குறிப்பிட்டார்.
அதற்கு பலவேறு காரணங்கள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் அந்த முயற்சியை குறுகிய பார்வையுடன் நோக்கினர்.
இதன்காரணமாக 2003ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்தையும் ரத்துச் செய்யப்பட்டது.
இதேவேளை கடந்த காலத்தில் பல முரண்பாடுகள் இருந்தபோதும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சந்திரிக்காவுடன் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக்கட்சி இணங்கியது.
இதனடிப்படையில் பல்வேறு அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.


தமிழர்கள் வாழ்ந்த பல எல்லைக்கிராமங்களில் இதுவரை எந்த அபிவிருத்தியும் இல்லை: சுவிஸ் அன்பே சிவம் நிகழ்வில் த.கலையரசன்
[ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 03:02.42 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்த பல எல்லைக்கிராமங்கள் எந்த அபிவிருத்தி வேலைப்பாடுகளோ, அல்லது புனரமைப்பு வேலைப்பாடுகளோ இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
சுவிஸ் சூரிச் சிவனாலய அன்பே சிவம் அமைப்பின் அனுசரனையில் நேற்று வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் அ.அருளானந்தசோதி தலைமையில் வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
அன்பேசிவம் அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி 75 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் அ.அருளானந்தசோதி அதன் இணைப்பாளர் கு.குமணன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர். வடகிழக்கு பிரதேசமானது யுத்த சூழலால் மாத்திரமல்ல சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். ஆனால் அரசியல் ரீதியாகவோ அரசசார்பற்ற நிறுவனங்கள் ரீதியாகவோ புறக்கணிக்கப்பட்ட நிலையிலேதான் இன்றும் இருந்து கொண்டு வருகின்றது.
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எத்தனையோ தமிழ் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி மாற்று சமுகத்திடம் தொழில்வாய்ப்பிற்காக சென்று அவர்களது பிடிக்குள் சிக்குண்டு சின்னாப்பினமாக வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருப்பதனையும் காணமுடிகின்றது.
இதனையெல்லாம் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகள் கருத்தில் கொண்டு இன்று சுவிஸ் நாட்டில் இருக்கும் அன்பே சிவம் அமைப்பினைப்போன்று பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து எமது தாயக உறவுகளுக்காக சேவை செய்ய முன்வரவேண்டும்.
இன்று அன்பே சிவம் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினது கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிப்பதோடு மாத்திரம் நின்று விடாமல் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தியும் வருகின்றது என்பதும் குறிப்படத்தக்கது எனவும் கூறினார்.
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.கலையரசன் அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயிலில் மன்மத வருட தேர், தீர்த்த உற்சவங்களின் போது தாயகத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கில் சேகரிக்கப்பட்ட நிதியைக் கொண்டு 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இவ் உதவியை வழங்கிய சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கு அதிதிகள் மற்றும் மாணவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyHTaSUet6C.html

Geen opmerkingen:

Een reactie posten