நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் எமக்கு சகல சம உரிமையுண்டு என இன்னும் நம்பி அவைகளை அனுபவிக்க துடிக்கும் நாம் உங்களிடம் சில சந்தேகத்தை தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் முன்னைய அரசில் பல அமைச்சு பதவிகளை வகித்தீர்கள். ஸ்ரீ.ல.சு.கட்சியில் மிக பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்தீர்கள். அப்போது நாட்டில் உரிமைக்காக போராடிய எமது இனத்தை பயங்கரவாதிகள் என்ற புனை பெயரை சூட்டி அழித்த மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அமைச்சராகவும் அவர் வெளிநாடு செல்லும் போதுதெல்லாம் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றினீர்கள்.
அவ்வாறு இந் நாட்டு சிங்கள மக்களுக்கு மாத்திரமே தலைவராக செயற்பட்ட மகிந்தவின் குழுவில் இருந்த நீங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டீர்கள்.
அப்போது பல வழிகளிலும் இன்னல்களுடன் வாழ்ந்த எமது மக்களே நீங்கள் வெற்றிபெற வழிவகுத்தார்கள். இந்நாட்டில் சமாதானத்தை விரும்பிய சிங்கள மக்களுடன் கைகோர்த்த தமிழரின் வாக்கு உங்களுக்கு வெற்றியை தந்தது இதை எமது தலைவர்களும் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
ஏன் என்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கொள்கைக்கு இணங்க. எமது தலைமைகள் வடக்கு - கிழக்கு, ஏன் மலையகமாக இருந்தால் என்ன ? அவர்கள் நல்லவர்கள் ஆகவே அவர்கள் பொது தமிழ் மக்களுக்காக எதையும் கேட்டு போராடமாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்த விடயமாகும்.
அதேவேளை அவர்கள் சில நேரங்களில் மிக மிக நல்லவர்களாக மாறி முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் தங்கள் குடும்பங்களின், உறவினர்களின், மற்றும் நெருங்கிய நண்பர்களின் நலனுக்காக மாத்திரம் பல ரகசிய சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டியவற்றை தேவைக்கு அதிகமாகவே பெற்றுக்கொள்ள மஹிந்த அவர்கள் உதவியது உங்களுக்கு நன்கு தெரியும்,
அதேவேளை மக்கள் முன் எமது தலைமைகள் வேறு கதைகளை கூறும் திறமையை கொண்டிருந்தார்கள். நான் கூறுவது ஒரு சிலரை பற்றியதே தவிர சிலர் நேர்மையாக இருந்து போராடியர்கள் அவர்களை பற்றிய விபரங்கள அதிகம் மக்களிடம் பிரச்சாரம் மூலம் சொல்லப்பட வேண்டியது அவசியமில்லை.
அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவே அன்றும் இன்றும் மக்களின் நன்மைகளுடனான விடயங்களுடன் இருக்கின்றார்கள் என்பது எம்மை விட உங்களுக்கு நன்கு தெரியும்.
மஹிந்த ஐயாவும் தமிழ் சுய நல அரசியல்வாதிகள் ஒன்றை கேட்டால் பத்தை அள்ளி கொடுப்பாரே தவிர கிள்ளி கொடுக்காதவர் என்பது அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரச்சார மேடையில் கூறிய ஊழல் கோவை (Corruption file) அவர் வைத்திருப்பதாக கூறிய உரைகள் உறுதிப்படுத்தியது.
இவைகள் கடந்தவை என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் நாம் இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவதின் நோக்கம் நீங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நடந்தவைகளை உங்கள் வெற்றியின் பின்னர் மறந்திருக்கலாம்.
அதற்காகவே இதை தெரிவித்து எமது எதிர்கால கோரிக்கையை முன்வைக்கின்றோம். நீங்கள இப்பொழுதும் சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த பாக்கியம் இனி வரும் எந்த ஜனாதிபதிக்கும் இருக்காது என்பது சகலரும் அறிந்த விடயமே. இப்பொழுது புதிய நாடாளுமன்ற தேர்தலை நடாத்த தீர்மானித்து விட்டீர்கள்.
இனி நீங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டீர்கள். அத்தோடு ஆட்சி காலத்தையும் குறைத்துக் கொண்டீர்கள். இது அடுத்த ஜனாதிபதியாக போட்டியிடுபவர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.
அத்தோடு நின்று விடாமல் நாடாளுமன்ற தேர்தலில் முன்னைய ஜனாதிபதியை போட்டியிட வைத்ததோடு சகல கட்சி அரசியல் தலைவர்களையும் ,மக்களை சந்திக்கவும், அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும், உங்களின் சர்வ அதிகாரத்தை பயன்படுத்தி கட்டளையிட்டீர்கள்.
இப்பொழுது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட ரணில் மற்றும் ஏனைய அத்தனை நாடாளுமன்றத்திற்குள் வர ஆசைப்படும் அணைவரையும் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களை சந்திக்க வைத்து விட்டீர்கள்.
இதில் தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளார்கள் என்பதும் உங்களுக்கு நன்கு தெரியும்.
இந்த அற்புதமான நேரத்தில் நீங்களே இந்நாட்டின் தனித் தலைவர் உங்கள் கைகளிலேயே சகல சட்டங்களும் அதிகாரங்களும் உண்டு. இப்பொழுது நீங்கள் இடுகின்ற ஒவ்வொரு கையொப்பங்களும் அரச ஆணைகளும் மிக பெறுமதி வாய்ந்தது.
இது நாட்டின் தலைவிதியை மாற்றும் அதீத சக்திக்கொண்டது. உங்களை எதிர்த்து கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்படிபட்ட உங்களை பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக மக்கள் முன் செல்லும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ,ரணில்,உட்பட எந்த ஒரு அரசியல் தலைமைகளுக்கும் கேள்வி கேட்க முடியாத சக்தியாகிவிட்டீர்கள்.
இப்பொழுது எங்கள் தமிழ் தலைமைகளுக்கும் உங்களை நேரில் சந்தித்து எமது பிரச்சினைகளை பேச நேரம் இல்லை. அதே நிலையே சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள். அவர்களை வாக்குவேட்டைக்கு அனுப்பிவிட்டீர்கள்.
இப்பொழுது எங்கள் தமிழ் தலைமைகளுக்கும் உங்களை நேரில் சந்தித்து எமது பிரச்சினைகளை பேச நேரம் இல்லை. அதே நிலையே சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள். அவர்களை வாக்குவேட்டைக்கு அனுப்பிவிட்டீர்கள்.
அத்தோடு மாத்திரம் நிற்கவில்லை நீங்கள் இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி வரை உங்களுக்கு பரம எதிரியாக இருந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் தேர்தலில் போட்டியிட உங்கள் அனுமதிக்க போராடிய பின் நீங்கள் அனுமதியும் கொடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டீர்கள்.
இந்நிலையில் இப்பொழுது நீங்கள் இன தலைவைர் என்ற நிலையில் இருந்து இந் நாட்டில் வாழும் சகல இனத்தின் தலைவராக வரும் ஐந்து வருடம் ( 6 ஆம் மாதம் கடந்து விட்டது)இருக்கப்போகின்றீர்கள் அதுமட்டமா?
நீங்கள் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை நடாத்தி செல்ல முடியாதவாறு குழப்பிய மகிந்த சார் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாதாரண வேட்பாளராக்கி இன்று கட்சியின் சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்காக உங்கள் காலடிக்கு கொண்டுவந்துள்ளீர்கள்.
அதேவேளை இப்போது முக்கிய அரசியல் கட்சிகலான ஐ.தே.க வோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அல்லது ஸ்ரீ.ல.சு.கயோ மற்றும் ஏனைய கட்சியும் இனி நீங்கள் எடுக்கும் எந்த தீர்மானத்தாலும் மக்கள் முன் செல்வாக்கை இழக்க எந்த சந்தர்ப்பமும் கிடையாது.
காரணம் உங்களை சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு மக்களும் அரசியல் தலைமைகளும் இருக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் உள்ள நியதியாக உள்ளது.
காரணம் உங்களை சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு மக்களும் அரசியல் தலைமைகளும் இருக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் உள்ள நியதியாக உள்ளது.
நீங்கள் எடுக்கும் முடிவிற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற வகையில் கடும் தண்டனையை பெற்றாக வேண்டும்.
நீங்கள் நன்றியை மறக்காதவர் என்று பேசப்படுகின்றது. ஆகவே இப்பொழுது நீங்கள் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அது இந்த முழு நாட்டிற்கும் ஏற்புடையதாகும். உங்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற எமக்கும் நீங்கள் நாம் உங்களை வெற்றிபெற வாக்களித்த காரணத்திற்கு நன்றிக் கடனாக இந்த சந்தர்ப்பத்திலாவது இந்த நாட்டின் பிரச்சினைகளில் மிக முக்கிய தீர்மானங்களை சுயமாக எடுக்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தலாம்.
அதன் அடிப்படையில் உங்கள் வெற்றிக்கு உதவிய எமது மக்களின் முக்கிய பிரசிச்சினைகளை தீர்க்க நீங்கள முன்வந்து நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவம் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் எமது காணிகளை மீண்டும் எம்மிடம் ஒப்படையுங்கள்.
காரணமின்றி சிறையில் வாடும் எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள். எமது கலாச்சார விழுமியங்களை அழிக்கும் போதை பொருள் பாவனையை தடை செய்யுங்கள்.
70ஆயிரத்திற்கும் மேல் உள்ள விதவை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த பொருளாதார உதவிகளை வழங்குங்கள்.
அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொள்ள அதி விசேட நிதியை அரசும் வெளிநாடுகளில் நிதியை பெற்றும் அம்மக்களுக்கு வழங்குங்கள்.
எமது இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
இந்த நாட்டிற்கும் வாழும் சகல இன மக்களுக்கும் தேசிய தலைவர் என்பதை உறுதிபடுத்தும் முகமாக புனித புத்த பகவானின் கொள்கையின் படி அந்த சித்தார்த்தனின் சிறந்த பண்புகளான சகல உயிர்களுக்கும் தீங்கு செய்யாத தேசிய தலைவர் என்ற பதத்துடன் இந்த நாட்டை அமைதி, சமாதானம் அபிவிருத்தி என்ற பண்பான நாடாக மாற்றுங்கள் இதுவே எமது பணிவான கோரிக்கையாகும்.
நன்றி
மகா
Geen opmerkingen:
Een reactie posten