எது எவ்வாறாக இருப்பினும் இனஅழிப்பை பயங்கரவாதம் என்ற போர்வையில் மேற்கொண்ட சிறிலங்கா அரசானது 5 வருடமாக போர்க்குற்றவாழி என்ற பெயரைச் சுமந்துகொண்டு அழிப்பிற்கு உள்ளாகிய இனத்திற்கு தீர்வு எதுவும் வழங்காமலும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பித்துக்கொண்டு தன்னை ஒரு ஜனநாயக அரசு என்று உலகிற்குப் பறைசாற்றிக்கொண்டு சீனாவினை கையையும் இந்தியாவின் கையையும் இறுகப் பற்றிக்கொண்டு உலகில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றது என்பது கண்கூடு.
அதுமட்டுமல்ல தமிழினத்தின்மீது சிறிலங்கா அரசினது அணுகுமுiறாயனது தொடர்ந்தும் இன அழிப்பினை வேறுபாணியில் நாடாத்திக்கொண்டுதான் இருக்கின்றது என்பதை அன்றாடம் அங்கு நடைபெறுகின்ற தமிழ் ஊடகங்கள் தாக்கப்படுதல், தமிழ் பெண்கள் காணமல் போதல், கொலை செய்யப்படல், தமிழ் மாணவர்கள் தாக்கப்படுதல், கைது செய்யப்படுதல் போன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன?
மகிந்த ராஜபக்ச தனது தமிழினப்படுகொலை வெற்றியை தனது சொந்த இடமான மாத்தறையில் வெகுவிமர்சையாக இராணுவ ஊர்வலம், இராணுவ வாகனங்கள் பவனி உட்பட ஆகாய மார்க்கமான விமான ஊர்வலங்கள் அடங்கலாக வெகு விமர்சையாகக் கொண்டாடுவதான தகவல்களை கனடிய ctvnews தெரிவித்திருக்கின்றது.
தமிழ்மக்கள் பாரம்பரியமாகப் பெரும்பான்மையாக வழந்துவருகின்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் சிறிலங்காப் படைகளினால் சூழப்பட்டிருக்கின்றார்கள். அத்துடன் அங்கு அரசியர் கட்சிகள், மற்றும் பத்திரிகைக் காரியாலங்கள் முன்னெடுக்கும் தமிழின அழிப்பின் நினைவு கூரல் பொது நிகழ்வுகளைத் தடுக்கும் முயற்சிகள் படைகளின் உதவி கொண்டு நசக்கப்படுகின்றன. ஆனால் ஆலயங்களில் இன அழிப்பில் தம்முயிரை ஈந்த மக்களை நினைவுகூர்ந்து சடங்குகள் நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ இந்த நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என M.A. Sumanthiran, a Tamil lawmaker தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இறந்தவர்களை உற்றார் உறவினர்கள் நினைவு கூருவதைத் தடுப்பதன் மூலமாக சிறிலங்கா எங்கே செல்கின்றது என்ற தார்மீகக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் Sumanthiran.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளரான என்பவர் உடனடியாக எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லையென ஊடகம் தெரிவித்திருக்கின்றது.
அதே நேரம் சிறிலங்காவில் 2009ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்தது எனக் கூறப்படு
ன்ற சிறிலங்கா அரசானது பாரதூரமான மனிதாபிமான விரோதச் செயல்களை அதிகமாகப் போரின் இறுதிக்காலங்களில் செய்திருக்கின்றது என United Nations Human Rights Council தெரிவித்திருப்பதுடன் இந்த வருடம் சர்வதேச விசாரணை இரு தரப்பினரிடையே நடாத்தப்படவேண்டும் எனத் தெரிவித்திருப்பது முக்கியமான விடையமாகவுள்ளது.
ன்ற சிறிலங்கா அரசானது பாரதூரமான மனிதாபிமான விரோதச் செயல்களை அதிகமாகப் போரின் இறுதிக்காலங்களில் செய்திருக்கின்றது என United Nations Human Rights Council தெரிவித்திருப்பதுடன் இந்த வருடம் சர்வதேச விசாரணை இரு தரப்பினரிடையே நடாத்தப்படவேண்டும் எனத் தெரிவித்திருப்பது முக்கியமான விடையமாகவுள்ளது.
UN அறிக்கையில் 80,000ற்கும் 100,000ற்கும் இடைப்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் எனவும் இறுதிக்கட்டப் போரில் மட்டும் 40,000 மக்கள் அளவில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சமாதானத்தை விரும்பும் குழக்களும் சிறிலங்கா அரசின் போர்க்குழுவும் பெரும் வெற்றிக்கான கொண்டாட்டங்கள் பற்றி எச்சரித்திருந்தும் அரசு அவற்றை செவிசாய்க்கவில்லையெனத் தெரிகிறது
வடபகுதி மக்கள் திரும்பவும் தனித்துவமான அரசு, சொந்தக் கட்டமைப்பு என்ற எண்ணத்தைக் கொள்வதற்கு எமது நாடு வழிசமைக்கின்றது என்ற கருத்தினை the National Peace Councilஒரு அறிக்கையில் வெளியிட்டடிருக்கின்றது. மேலும் அந்த அறிக்கையில் “ உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தபின்பு எந்தப் புத்திசாலியான நாடும் போர் வெற்றியைக் கொண்டாடாது” எனத் தெரிவிக்கின்றது.
- See more at: http://www.canadamirror.com/canada/26171.html#sthash.wuKF0hJ4.dpufவடபகுதி மக்கள் திரும்பவும் தனித்துவமான அரசு, சொந்தக் கட்டமைப்பு என்ற எண்ணத்தைக் கொள்வதற்கு எமது நாடு வழிசமைக்கின்றது என்ற கருத்தினை the National Peace Councilஒரு அறிக்கையில் வெளியிட்டடிருக்கின்றது. மேலும் அந்த அறிக்கையில் “ உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தபின்பு எந்தப் புத்திசாலியான நாடும் போர் வெற்றியைக் கொண்டாடாது” எனத் தெரிவிக்கின்றது.
Geen opmerkingen:
Een reactie posten