தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 mei 2014

குற்றச் செயல்களுக்கு தண்டனை வேண்டும் – அமெரிக்கா!

கீரிமலைக்கு சென்றவர்களை அனுமதியாத இராணுவம்

இதேவேளை கீரிமலைப் பகுதியிலிருந்து வெளியேறியவர்கள் கூட தமது பகுதிகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு மக்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதேவேளை யாழ்.நல்லூர் ஆலய முன்றலிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலும் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள கற்பகப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் இன்று காலை அங்கு சென்ற படையினர் மகோற்சவத்தை நடத்தவேண்டாம் என்றும் மணி ஒலிக்கக் கூடாது என்றும் மிரட்டியதாகவும் தெரியவருகிறது. Kirimalai1
http://www.jvpnews.com/srilanka/69684.html

குற்றச் செயல்களுக்கு தண்டனை வேண்டும் – அமெரிக்கா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைகளை நடாத்த இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டத் தவறியதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படாது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாது நிலையான சமாதானத்தையோ நல்லிணக்கத்தையோ நாட்டில் எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவின் உறுப்பு நாடுகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ரீதியான விசாரணைகள் நாட்டுக்கு நன்மையையே ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/69690.html

Geen opmerkingen:

Een reactie posten