தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 10 mei 2014

முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய ஆயுதக்கிடங்கு! பீதியடைந்த இராணுவம்!

சிறிலங்கா – இந்தியா இடையே இரகசிய ஆயுத பேரம்?

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, இந்திய நாடாளுமன்றில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை ஒன்றில், சிறிலங்காவிடம் ஆயுதங்கள் வாங்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து. நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, சிறிலங்கா பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆயுத விற்பனை எப்போது நடந்தது – எந்த வகையான ஆயுதங்களை இந்தியா வாங்கியது- சிறிலங்காவினால் அதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் எவ்வளவு – இந்த ஆயுத விற்பனை வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற்றதா என்று அறியவிரும்புவதாக தலதா அத்துகோரள கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிறிலங்கா பிரதமரின் சார்பில் பதிலளித்த அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான, தினேஸ் குணவர்த்தன,
இந்தக் கேள்விக்கான பதில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பதிலளிக்க இரண்டு மாத அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தலதா அத்துகோரள, இதற்கான பதில் ஒரு வரியில் தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரினார்.
அதற்கு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இந்தியத் தேர்தல் முடிவடைந்த பின்னர் பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் பதில் இந்தியத் தேர்தலில் தாக்கம் செலுத்தாது என்று தலதா அத்துகோரள கூறியபோது, பதிலளிக்கப்பட்ட பின்னர் தான், விளைவு குறித்துப் பார்க்க முடியும் என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/68760.html

நளினி முருகன் திடீர் சந்திப்பு..

வழமையான சந்திப்பு என பலரும் கூறினாலும் இன்றைய சூழலில் பல விடயங்களை இருவரும் மனம் விட்டுப் பேசியிருக்கக் கூடும் என ஊகிக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் இச் சந்திப்பின் தன்மையை அவதானிக்குமிடத்து அது அவர்கள் இருவரினதும் பாசப் பினைப்பை அதிகரிப்பதாக தென்பட்டதாக சிறைச் சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வழமையான சந்திப்பு என பலரும் கூறினாலும் எம்மைப் பெறுத்தவரையில் இது திடீர் சந்திப்பாகவே தாதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது
http://www.jvpnews.com/srilanka/68767.html

முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய ஆயுதக்கிடங்கு! பீதியடைந்த இராணுவம்

முல்லைத்தீவில் இறுதிப் போர் நடந்த வெள்ளமுள்ளிவாய்க்கால் என்ற இடத்தில், கடற்கரையோரமாக இந்த ஆயுதக்கிடங்கு நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதக்கிடங்கில் இருந்து 56 ஆயிரம் மக்னம் பிஸ்டல் துப்பாக்கி ரவைகள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் 9 மி.மீ ரவைகள், மற்றும் 12 போர் வேட்டைத்துப்பாக்கிகளுக்கான ரவைகள் 2750 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கூடப் பயன்படுத்தக் கூடிய வகையில், இந்த ரவைகள், கிறீஸ் பூசப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மீனவர்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, கிழக்கு கடற்படைத் தலைமையகம் இவற்றை மீட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தனி ஆயுதக்கிடங்கு இதுவென்றும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.Mtalin-NaveMtalin-Nave-01Mtalin-Nave-02Mtalin-Nave-03
http://www.jvpnews.com/srilanka/68763.html

Geen opmerkingen:

Een reactie posten