சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு நடாத்திக்கொண்டிருக்க CID,முற்றுகை.
சிவாஜிலிங்கம் ஏற்றிய தீபத்தை காலினால் எட்டி உதைத்த பொலிஸ்
இலங்கையின் வடக்கு மாகாணசபையில் இன்று நடைபெறவிருந்த முள்ளிவாக்கல் நினைவேந்தல் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மாகாணசபை உறுப்பினர்களால் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வை தடுக்கும் முகமாக மாகாணசபை அமைந்துள்ள பிரதேசம் எங்கும் பெருமளவான பொலிஸாரும் , புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களை சபைக் கட்டடத்துக்குள் உள்நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகிய இருவரும் இணைந்து மாகாணசபை கட்டிடத் தொகுதி எல்லைக்கு வெளியில் தீபத்தினை ஏற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டனர்.
இதன் போது சிவாஜிலிங்கத்தால் ஏற்றப்பட்ட தீபத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலினால் தள்ளி வீழ்த்தி தீபத்தை அணைத்து விட்டு இங்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தமுடியாது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் அஞ்சலி உரையாற்றிவிட்டு குறித்த இடத்தை விட்டு வெளியேறினர்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட முடியாத நிலையில் இலங்கையில் நல்லிணக்கம் எங்கே இருக்குன்றது…?
http://www.jvpnews.com/srilanka/69617.html
Geen opmerkingen:
Een reactie posten