[ சனிக்கிழமை, 17 மே 2014, 09:41.06 AM GMT ]
இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஈழத்தமிழர்கள் தனி இராச்சியமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
1948 ல் ஆங்கிலேயர் ஆட்சிப் பொறுப்பை சிங்களவரிடம் ஒப்படைத்த நாளிலிருந்து தமிழர்கள் இரண்டாம்தர பிரஜைகளாகவே சிங்கள ஆட்சியார்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளனர்.
இதனாலேயே தமிழ் மக்கள் ஆரம்பத்தில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் தமது அரசியல் கோரிக்கையை முன்வைத்து 60 வருடமாக போராடி வந்தனர்.
எனினும் துரதிஸ்டவசமாக 2009 மே 18 உடன் தமிழினத்தின் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாத பட்டம் சூட்டப்பட்ட எமது மக்கள் போராட்டம் திட்டமிட்ட முறையில் மௌனிக்க வைக்கப்பட்டுள்ளது.
1956 களிலிருந்தே எம்மை அடக்கி ஆள நினைத்த சிங்களத் தலைமைகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிறுகச் சிறுக எம்மக்களை கொன்றொழித்து இறுதியில் 2009 இல்; சர்வதேச மனிதாபிமான, யுத்த சட்டங்களை கருத்தில் எடுக்காது கொத்துக் கொத்தாக மக்களை கொன்றொழித்தது. இதுதிட்டமிட்டவகையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மனிதகுலத்தின் அடிப்படை அம்சங்களான உணவு, மருந்துப் பொருட்கள் என்பவற்றிற்கு கூட தடை விதித்து பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் குறிப்பிட்டவொரு சிறிய நிலப்பரப்பில் மக்களை தங்க வைத்து தனது இனவெறி தாண்டவத்தை இந்த ஆட்சியாளர்கள் நடாத்தி காட்டியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த தங்களின் உறவுகளிற்கு ஆத்ம அஞ்சலி செலுத்துவதற்கு நாதியற்ற இனமாக ஈழத் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. .
இதன் வெளிப்பாடுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதும் வடமாகாண சபைக்கு முன்பாக உறுப்பினர்களால் ஏற்றப்பட்ட தீபங்களை காலால் தட்டியணைத்த சிங்கள காவல்துறையின் அராஜகமும். ஈழத்தமிழ் மக்களுக்கு தி.மு.கவும் காங்கிரசும் செய்த வரலாற்று துரோகத்திற்கு தக்க தண்டனையை அண்மைய இந்திய தேர்தல்முடிவுகள் பறைசாற்றியுள்ளது.
ஈழத்தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடித்த கலைஞரும் தமிழின அழிப்பிற்கு சிங்களத்திற்கு துணைபோன காங்கிரசும் எமது தொப்புழ்கொடி உறவுகளான தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
தற்போதைய சிங்கள ஆட்சியாளர்களும் மண்கவ்வும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே நிஜம். காலம் கனிகிறது. மாற்றத்தை எதிர்பார்த்து தைரியத்துடன் இருப்போம்.
தமிழினத்தின் உரிமைக்காய் உயிர்நீத்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய மே 18 ல் பிரார்த்திப்போமாக.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeo7.html
படையினரின் தடைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுடன் ரவிகரன் அகவணக்கம்
[ சனிக்கிழமை, 17 மே 2014, 11:37.03 AM GMT ]
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும் தமிழர் இறையாண்மையை காக்கவென களமாடிய மாவீரர்களுக்குமென மக்களுடன் சேர்ந்து வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் இன்று அகவணக்கம் செலுத்தப்பட்டது.
20 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் தடைகளுக்கு மத்தியில் மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன், நிகழ்வு அனைத்தும் இராணுவ புலனாய்வாளர்களாலும் இராணுவத்தினராலும் காணொளி பதிவாக்கமும் செய்யப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யுத்தத்தால் தமது தாய் அல்லது தந்தையர் அல்லது இருவரையும் இழந்த கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை, சீருடைகள், காலணி (சப்பாத்து) மற்றும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று காலை முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ரவிகரனால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வு தொடங்கும் முன்னர் மக்கள் செறிவை அவதானித்த இரு புலனாய்வாளர்கள் அங்கு ரவிகரனின் பிரவேசத்தையும் அவதானித்து, வாகனங்களையும் மக்களையும் படம் பிடிக்க தொடங்கியதுடன் தொலைபேசி மூலம் தகவல்களையும் வழங்க தொடங்கினர்.
இந்நிலையில், நிகழ்வை ஆரம்பிக்க எத்தனிக்கையில் உந்துருளிகளில் வருகை தந்த இராணுவத்தினர் ரவிகரனை அழைத்து விசாரிக்க தொடங்கினர். அவர்களுக்கு பதிலளித்து விட்டு நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.
இதன் போது எந்த நிகழ்வையும் நடத்த 3 நாட்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்று கூறி இராணுவத்தினர் நிகழ்வைத் தடுக்க முயன்றனர். எனினும் அதை முற்றாக எதிர்த்தவாறு நிகழ்வை ஆரம்பித்தார் ரவிகரன்.
இதையடுத்து யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் தமிழர் இறையாண்மையை காக்கவென களமாடிய மாவீரர்களுக்குமாக மக்களும் ரவிகரனும் அகவணக்கம் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நிகழ்வின் ஆரம்ப உரையை வழங்கிக் கொண்டிருக்கையில், வாகனங்களில் வந்திறங்கிய இருபதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கே குழுமியதுடன் கூட்டத்தை இடைமறித்து ரவிகரனை அழைத்தனர்.
நீங்கள் செய்யும் எந்நிகழ்வாயினும் இந்த தினங்களுக்குள் செய்ய வேண்டாம். இவ்வாறான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமல் இங்கு இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். என்று கூறியிருக்கின்றனர்.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு மேற்படி நிகழ்வு அவசியம். அத்துடன் நாம் இங்கு இழந்தது எங்களது மக்கள். எங்கள் உறவுகள். ஆகவே அகவணக்கம் செலுத்துவதே நாகரீக மரபாகிறது. அவர்களை நினைவு கூரும் உரிமையை நீங்கள் மறுக்க முடியாது.
யுத்த வெற்றி என்று ஆங்காங்கே ஒரு இனம் கொண்டாடும் போது இங்கு நாம் எதுவும் செய்யக்கூடாது என்று எவ்வகையில் சொல்லலாம். இங்கு நாம் செய்வது எமது சமூகத்தை யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் செயன்முறை என்று கடும் தொனியில் கேட்டார்.
இவ்வாறிருக்கையில், இராணுவத்தினருடன் வாக்குவாதப்பட்ட பின்னர், தனது உரையினை நிகழ்த்தியுள்ளார்.
எமக்கேற்பட்ட இழப்புகளை தாண்டி எம் சமூகம் எழுச்சியுற தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியும் முக்கிய பங்காகிறது. பெற்றோர் பாதுகாவலர் என்ற வகையில் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டியது உங்களது கடமை.
இழப்புக்களை தாண்டி எழுச்சியுறு சமூகத்தை கட்டியெழுப்ப இந்நாட்களில் உறுதி காண்போம் என்ற விதத்தில் தனது உரையை நிகழ்த்தியதோடு, மாணவர்களுக்கும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பெற்றோருக்கும் குறித்த பொருட்களை வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் அவ்விடத்திற்கு வருகை தந்த வலிகாமம் வடக்கு பிரதேசசபை உபதலைவர் சுஜீபனும் நிகழ்வில் இணைந்து பொருட்களை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYep2.html
Geen opmerkingen:
Een reactie posten