ஜனாதிபதி- அமைச்சர் விமலின் போலியான நாடகம் அம்பலம்
[ சனிக்கிழமை, 17 மே 2014, 08:45.14 AM GMT ]
பத்தரமுல்லையில் உள்ள வோட்டர் ஹெச்ஜில் நேற்றிரவு நடைபெற்ற நிறுவனம் ஒன்றின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
அமைச்சர் வீரைவன்ஸ, ஜனாதிபதியை வரவேற்றதுடன் இருவரும் படங்களுக்கு காட்சி கொடுத்தனர். இருவருக்கும் இடையில் பதற்றம் இருப்பதை அவதானிக்க முடியவில்லை.
அமைச்சர் வீரவன்ஸவுக்கு அடுத்ததாக அங்கு அமர்ந்திருந்த ஜனாதிபதி, மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார்.
தொலைக்காட்சி ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்குபற்றி வீரவன்ஸ, அரசாங்கத்தை விமர்சித்திருந்துடன் ஜனாதிபதியின் நிர்வாகம் போலித்தனமானது என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், வர்த்தக நிறுவனம் ஒன்றின் நிகழ்வில் இருக்கும் இடையில் என்ன பேசப்பட்டது என்பது இரகசியமானது.
ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியந்த ஜெயரத்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் ஜனாதிபதியும் வீரவன்ஸவும் அமர்ந்திருந்த அதே மேசையில் அமர்ந்திருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எடுக்கப்படும் அழைப்புகளுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ, பதிலளிப்பதில்லை என ஜனாதிபதி சில அமைச்சர்களிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அத்துடன் அமைச்சர் வீரவன்ஸ, சில அமைச்சரவை கூட்டங்களையும் தவிர்த்திருந்தார். ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeo5.html
மோடியின் வெற்றியால் இலங்கை அகதிகள் உற்சாகம்!
[ சனிக்கிழமை, 17 மே 2014, 09:14.53 AM GMT ]
1லட்சம் பேர் காவல்துறை பதிவு மூலமாக வெளியில் வாடகை வீடுகள் எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மானியமாக குடும்பத்தலைவர்க்கு 1000 ரூபாய் 12வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய் அதற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு 400ம் வழங்கி வருகின்றனர்.
என்னதான் இலவசத் திட்டங்கள் வழங்கினாலும் சரி இவர்களுக்கு குடியுரிமை கிடையாது.
இந்தியாவை தொடர்ந்து 10ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இவர்கள் மீது அக்கரை செலுத்தவில்லை என்றே சொல்லலாம். முகாம்வாசிகளை பொறுத்தவரைக்கும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
அந்தக்கனவு நனவாகிவிடும் என நினைத்து தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தொலைக்காட்சிகள் வாயிலாக பார்த்து கொண்டு இருந்தனர். தனியாக யார் தயவும் இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது.
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி இந்தியாவில் திசை தெரியாமல் போனது என்று மகிழ்ந்தனர்.
இவர்கள் மட்டுமல்லாமல் கனடா, பிரான்ஸ், லண்டன், நோர்வே போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் ஆட்சி மாற்றம் இந்தியாவில் வந்துவிட்டது என்று வெடி வெடித்தும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் பறிமாறியும் மகிழ்ந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeo6.html
Geen opmerkingen:
Een reactie posten