தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

இந்தியாவோடு பயணித்தால் மாத்திரமே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்: செல்வம் எம்பி!


படையினர் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதியின் கருத்தை அமெரிக்கா நிராகரிப்பு!
[ புதன்கிழமை, 07 மே 2014, 06:49.43 AM GMT ]
ஓய்வு பெற்ற அமெரிக்கப் படையினரின் நலன்களில் அந்த நாட்டு அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருந்த கருத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு, நாரஹேன்பிட்டியவிலுள்ள புதிய இராணுவ மருத்துவமனையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கைப் படையினருக்கு அரசு மிகச் சிறப்பான பராமரிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா போருக்காகப் பெருமளவு நிதியைச் செலவிடு கின்றபோதிலும், போர்களில் பங்கேற்ற படையினரின் நிலை மற்றும் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற படையினரின் நிலையைப் பார்க்கும் போது கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
தாம் அமெரிக்காவில் வைத்து அந்த நாட்டுப் படையினர் சிலரை அண்மையில் சந்தித்த போது இலங்கை எவ்வாறு அதன் படையினரின் நலன்களைக் கவனிக்கின்றதென அவர்களுக்கு விளக்கிக்கூறிய போது, தமது அடுத்த பிறப்பில் இலங்கையில் பிறக்க வேண்டும் என்று அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர் எனவும் லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பாக வினவிய போது அதற்குப் பதிலளித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளரும், பொதுசனத் தொடர்பு அதிகாரியுமான கிறிஸ்டோபர்ரீல், இலங்கை இராணுவத்தளபதி தயா ரத்னாயக்கவின் கூற்றை முற்றாக மறுத்ததுடன், அமெரிக்கப் படையினர் உலகில் கடமையில் மிகச்சிறந்த படையினராகத் திகழ்வதுடன் தமது நாடு வழங்கக்கூடிய அதி உயர் கெளரவத்தையும் படை நலப் பராமரிப்பையும் பெறுவதாகக் குறிப்பிட்டார்.
இதனை விடுத்து வேறுவிதமாகக் கருத்துகளைக் கூறுவது தவறானது. இராணுவத் தளபதியின் கருத்து அவர்களது சேவையை அவமதிப்புக்கு உட்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.
படையினரின் நலன்களில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருவது மட்டுமன்றி, அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காக அமெரிக்க மத்திய அரசின் கீழ் அமைச்சரவை அந்தஸ்தைக் கொண்ட தனிச்சிறப்பான படைநல விவகாரத் திணைக்களம் இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தத் திணைக்களம் 1930 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டில் இந்தத் திணைக்களத்துக்காக மாத்திரம் 78 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவோடு பயணித்தால் மாத்திரமே அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்: செல்வம் எம்பி
[ புதன்கிழமை, 07 மே 2014, 07:09.55 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்த வரையில் இணைந்த வட கிழக்கிலேதான் பயணிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் செல்வம் அடைக்கலநான் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 28 வது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் கடந்த காலத்திலிருந்து போராடி வந்தவர்கள் எமது மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் ஒற்றுமையுடன் செற்படுவோம் என அடிக்கடி தெரிவித்து வந்தவர்.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின கட்சியின் பங்களிப்பானது மிகப் பெரியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதங்கு பத்திரிகையாளர்களும் அவர்களது முழு ஆதரவுகளை வழங்கினார்கள் இவற்றுக்கான ஆரம்ப வித்தாக செயற்பட்டவர்கள்தான் மறைந்த மூத்த பதிரிகையாளர்களான சிவராம், நடேசன் மற்றும் வெளிநாட்டிலே வசிக்கின்ற தவராசா, ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள். இவ்வாறு பல சிக்கல்களுக்கும் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் எமது மக்களின் தூர நோக்கு சிந்தனைகளோடு செயற்பட வேண்டும். அற்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலை பற்றித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது.
எமது போராட்டமும் இந்தியாவும் பின்னிப் பிணைந்த ஒன்று என மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்கள் அன்றய காலகட்டத்தில் சொல்லியிருந்தார். ஆனால் இந்தியாவின் இராஜதந்திர நிலையினை உலக நாடுகள் தங்களுக்கு ஏற்றாற்போல் பார்க்கின்றன.
இரண்டாவதுதான் எமது பிரச்சினைகளைப் பார்க்கின்றனர். அதேபோல் இந்தியாவும் தன்னுடைய நலனுக்காக சில முடிவுகளை மாற்றி வருகின்றது. ஜெனிவாவிலே இந்தியா நடுநிலைமை வகித்தது என்பதற்காக இந்தியாவை நாம் புறக்கணித்து எந்த விதத்திலும் செயற்பட முடியாது.
இந்தியாவிலே வருங்காலத்திலே ஆட்சிமாற்றங்கள் வராலாம். அப்போது எமது பிரச்சனைகளை எடுத்தியம்பலாம். ஏனெனில் இலங்கையில் நடைபெற்ற போராட்டம் திசை திருப்பப்பட்டது யாரால் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்தியோவோடு பயணித்தால்தான் எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதுவரை ஒற்றுமையுடனும் பலத்துடன் செயற்பட்டு வருகின்றது. எனவே நாங்கள் அனைவரும் எமது மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் செயற்பட வேண்டுமாக இருந்தால் வலுவான ஒரு பலத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால் மக்களின் விடுதலை கிடைக்கப் போவதில்லை.
எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் எமக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். அதற்காக வேண்டித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் ஆதரித்து வருகின்றார்கள்.
எமது ஆரம்ப காலத்தில் இணைந்த வடகிழக்கு ஒரு ஈழ தேசம் என நடந்தேறியிருக்கின்றன.  அதேபோல் இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தல் இணைந்த வடகிழக்கு என்ற நினைவோடு செயற்பட முடியும்.
தற்போதைய காலகட்டத்தில வடக்கு மாத்திரம்தான் பேசப்படுகின்றது கிழக்கு பற்றி கதைக்கப் படுவதே இல்லை என்ற கருத்தும் சிலரிடத்தில் நிலவி வருகின்றன.
வடக்கில் அதிக பாதிப்புக்கள் அழிவுகள் அட்டூழியங்கள் அதிகம் நடைபெற்றன. இவற்றினை எமது முதலமைச்சரினை வைத்து செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கிழக்கில் எமது முதலமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் இவ்வாறான கருத்துக்கள் வந்திருக்கமாட்டாது. கிழக்கில் கடந்த முறை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு ஆசனத்தினை பெற்றிருந்தால் கிழக்கு மாகாண சபையும் எமது ஆட்சிக்குள வந்திருக்கும்.
எமது மக்களை ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும். கிழக்கு, வடக்கு என்ற வேறுபாடுகள் பற்றி கருணா, பிள்ளையான் போன்றோர்களால்தன் பேசப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கைப் பிரித்துப் பார்கின்றது என்ற செய்தியினை கருணா, பிள்ளையான் போன்றோர்கள்தான் சொல்கின்றார்கள்.
ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றான் தாய் என்ற பேதங்ளைக் களைந்து செயற்பட்டுக் கொண்டு வருகின்றது.
எனவே எமது கட்சி தொடர்ந்து எமது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எம்மைப் பெறுத்த வரையில் எமது மூச்சு எமது மக்களின் உயிர்நாடடி எப்பொதும் நாம் எமது மக்களையும் செயற்பாடுகளையும் மறந்து செயற்பட மாட்டோம். அவ்வாறு செயற்பட்டால் எம்மினம் அனாதைகளாக்கப்பட்டுவிடும்.
எமது மக்;கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மட்டும்தான் நம்பியிருக்கின்றார்கள். ஆகவே எமது கூட்டமைப்பு பலமான, இறுக்கமான, கட்டமைப்புடன் செயற்படும். இவற்றில்தான் எமது கட்சியின் மறைந்த தலைவரின் ஆத்மா சாந்தியும் அமைந்திருக்கின்றது என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten