தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்


அனந்தி விடயத்தில் என்னைத் தொடர்பு படுத்தினார்கள்! நான் அங்கு இல்லை: சரவணபவன் எம்.பி
[ புதன்கிழமை, 07 மே 2014, 07:14.50 AM GMT ]
நடப்பு நாட்களில் தமித் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
அனந்தி விடயத்தில் என்னைத் தொடர்பு படத்தினார்கள்! நான் அங்கு இல்லை: சரவணபவன் எம்.பி
நடப்பு நாட்களில் தமித் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பமில்லை, ஒட்டுக் குழுக்கள் இலங்கை அரசுடன் இன்றும் மக்களை அச்சுறுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது என யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று பல விடயங்கள் பற்றிய சர்வதேசத்தை ஏமாற்றுவதில் இன்றைய அரசு கடந்த காலங்களில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா செய்த இழுத்தடிப்புக்களை இன்றைய அரசும் நடைமுறையில் செய்கிறது என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்
[ புதன்கிழமை, 07 மே 2014, 07:38.08 AM GMT ]
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தஞ்சம் தேடி வந்தவர்களை காவல்துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம் வருத்தமளிக்கும் நிலையில், இன்னொரு புறம் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த வேதனை தருகின்றன.
ஈழத்தமிழர்களின் துயரம் இப்போதைக்கு தீராதா? என்ற ஏக்கமும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.
இலங்கையில் 2009 ம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசு மீண்டும் தமிழ் இளைஞர்களை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டு கொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும் கொன்றொழித்துவிட்டு முழுமையான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் இந்தியா மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது.
இனப் படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது.
அதன் விளைவாகத் தான் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை தொடங்கியுள்ளனர்.
இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.
எனவே, இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அங்கு தமிழர்கள் கொல்லப்படுவதையும், கொடுமைப் படுத்தப்படுவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகு முறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் வழங்கப்படுவது போன்ற சலுகைகளை தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்க வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அகதிகள் குழந்தைகளை சிறைக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுப்பு!
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 5 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்இ அவர்களின் குழந்தைகளை சிறைக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ம் தேதி இலங்கை முல்லைத் தீவு பகுதியில் இருந்து 5 குழந்தைகள் உட்பட 10 பேர் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக வந்தனர். போலீசாரிடம் தஞ்சம் அடைந்த இவர்களை விசாரணைக்கு பின் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தவிர்த்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி இவர்களை இம்மாதம் 19 ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தைகள் உட்பட 10 பேரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், தயாபரராஜன் என்பவரது மகன் டியோரன் (9), கணேஷ் சுதாகர் என்பவரது மகள் நிலக்‌ஷனா (13) இவர்கள் இருவரையும் வயது அதிகமாக இருப்பதால் சிறைக்குள் அனுமதிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த இரண்டு குழந்தைகளையும் போலீசார் ராமேஸ்வரத்திற்கு திரும்பவும் அழைத்து வந்துள்ளனர்.
மேலும், போலீசாரின் பாதுகாப்பில் உள்ள அந்த இரண்டு குழந்தைகளும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten