தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

குராம் ஷேக் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை: நீதிமன்ற மருத்துவ அதிகாரி!


பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக் துப்பாக்கி சூட்டு காயங்களால் இறக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி தங்காலையில் வைத்து குராம் ஷேக் கொலை செய்யப்பட்டும், அவரது நண்பி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது சாட்சியமளித்த முன்னர் தங்காலை வைத்தியசாலையில் நீதிமன்ற மருத்துவ அதிகாரியாக செயற்பட்டவரும் தற்போது பதுளையில் பணியாற்றுபவருமான வைத்திய கலாநிதி கித்சிரி விஜயசேகர, தமது பரிசோதனையின் படி இந்த மரணம் துப்பாக்கி சூட்டினால் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் அவரின் உடலில் காணப்பட்ட 42 காயங்கள் அதிலும் மூக்கு பகுதியில் காணப்பட்ட காயங்களே மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கித்சிரி சுட்டிக்காட்டினார்.
மரணமானவரின் நெற்றியில் டி 56 ரக துப்பாக்கி மூலமான காயம் காணப்பட்டது.
இந்தநிலையில் இரவு உணவை முடித்துக்கொண்ட பின்னர் சுமார் அரை மணிநேரத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக நீதிமன்ற மருத்துவ அதிகாரி சாட்சியமளித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten