தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

இந்தியாவில் மகிந்தவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

இந்தியா செல்லும் ஜனாதிபதியுடன் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரியும் செல்கிறார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 08:32.15 AM GMT ]
இந்தியப் பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லும் இலங்கைக் குழுவில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா இடம்பெறுகிறார் என புதுடில்லிக்கான இலங்கைத்தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார்.
இந்த தகவலை இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நாளை மாலை பதவியேற்கிறார். இந்த நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இந்தியா செல்கிறார். இந்த குழுவில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், யாழ்.மாநகரசபை மேயர் யோகேஸ்வரி ஆகியோரும் இடம்பெறுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZkt0.html
இந்தியாவில் மகிந்தவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2014, 10:07.44 AM GMT ]
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் ஜனாதிபதி தங்கியிருக்கும் ஹொட்டல் மற்றும் அவர் பயணம் செய்யும் வீதிகளின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதியை தவிர, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோடி பதவியேற்பு நிகழ்வின் பாதுகாப்பு பணிகளுக்காக 6000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்திய ஜனாதிபதி மாளிகையில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும் இந்திய ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள வான் பரப்பிலும் இந்திய விமானப்படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRZLZkt4.html

Geen opmerkingen:

Een reactie posten