15 மற்றும் 8 சிறுமிகள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் முதல் இரு சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முந்தல் பிரதேச செயலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்கேநபரின் மனைவியான இரு சிறுமிகளின் தாய் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார். சிறுமிகள் இருவரும் வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten