[ வியாழக்கிழமை, 22 மே 2014, 08:12.02 AM GMT ]
இன்று பகல் 12 மணியளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தங்காலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆமி அமில என்றழைக்கப்படும் அமில நிரோஷன் என்ற நபர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கடையில் ஒருந்த வேளை குறித்த நபர் மீது, இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmw6.html
வட்டுக்கோட்டை தீர்மானம் அழிவுக்கான கோசங்கள்: பிள்ளையான்
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 07:50.46 AM GMT ]
நேற்று கைட் நோஸன் கம்பஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இளைஞர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது இவ்வாறான செயற்பாடுகள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். ஆனால் இன்றை இளைஞர் சமுதாயம் அறிவுப் புரட்சியின் பால் உந்தப்பட்டவர்கள். அவர்கள் நிச்சயம் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் குறிப்பிடுவது 1976ம் ஆண்டு அதாவது வட்டுக் கோட்டைத் தீர்மானம். இந்த தீர்மானத்தின் போது கிழக்கு மாகாணத்திலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் இங்கிருந்து மூளைச் சலவை செய்யப்பட்டு ஒரு சில கபடதாரிகளால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்டு அங்கே அதாவது வட்டுக் கோட்டைக்கே அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அப்போது அங்கு எடுக்கப்பட்ட தீர்மானமானது வெறுமனே அழிவுக்கான கோசங்களாகவே இருந்ததே தவிர, எந்தவிதமான ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் அது வித்திடவில்லை.
இதன்வாயிலாக கோசங்களும் கோசங்களை முன்வைத்த அந்த வட மேலாதிக்கவாதிகளும் வெற்றி பெற்றார்களே தவிர, ஒட்டு மொத்த எமது தமிழ் சமூகம் அழிவுப்பாதைக்கே சென்றது.
இந்த உண்மையை எத்தனை பேர் இன்று ஏற்றுக் கொள்வீர்கள். உண்மை ஒருபோதும் மறையாது! ஆனால் சற்று காலம் எடுத்தாவது அது வெளிவந்தே தீரும் என்றார்.
இந் நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பபு மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபாசக்கரவர்த்தி, மட்டு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், உதவி ஆணையாளர் தனஞ்சயன், தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சயின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன். மற்றும் கைட் நோஸன் கம்பஸினுடைய நிருவாகிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmw5.html
Geen opmerkingen:
Een reactie posten