தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 mei 2014

நேர்மையாக இல்லை என்றால் இன்று காங்கிரசுக்கு நடந்தது நாளை பாஜக விற்கு!!

இலங்கை இனப்பிரச்சினை! காங்கிரஸைப் போலவே மோடி அரசாங்கத்திற்கும் பொறுப்புக்கள் உண்டு
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 03:22.28 AM GMT ]
இலங்கை விடயத்தில் இந்தியாவின் புதிய அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்கள் வெளியிடப்பட்டு கொண்டிருக்கின்றன.
எனினும் பழைய காங்கிரஸ் அரசாங்கம் போலவே இலங்கை தமிழர் விடயத்தில் புதிய இந்திய பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு பொறுப்புகள் இருக்கும் என்று ஆய்வாளர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்.
புதுடில்லியை மையமாகக்கொண்ட அரசியல் ஆய்வாளர் எஸ். சத்தியமூர்த்தி இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தமிழகத்தின் செயற்பாடுகளை மையமாக வைத்தே இலங்கை தொடர்பில் காரியங்களை செய்ய வேண்டியிருந்தது.
எனினும் புதிய மோடி அரசாங்கத்துக்கு தமிழக அரசாங்கத்தின் ஓரளவு பங்கேற்புடன் தமது பங்களிப்பை முழுமையாக காட்டும் என்று சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தமிழகம், இலங்கை மற்றும் சர்வதேசம் என்ற அடிப்படையில் இருந்துக்கொண்டு செயற்படவேண்டிய நிலை இந்திய புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் தமிழ் தரப்பு, தமிழகத்தின் தமிழ் தரப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும்போது ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண ஏதுவாக இருக்கும் என்று சததியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmvz.html
மோடி நல்லவரா என்பது தெரியாது சோனியாவை விட மோசமானவர் அல்ல!
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 03:33.41 AM GMT ] [ valampurii.com ]
இந்திய தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருந்தது.
இந் நிலையில் எவருடைய ஆதரவும் இல்லாமல் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்கும் நிலையில் நரேந்திர மோடி பிரதமரானால் எங்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா? என்பதே இன்றைய வாதம்.
தேர்தல் பிரசாரத்தின் போது சொல்வதும் ஆட்சிப்பீடம் ஏறினால் அதை மறப்பதும் அரசியலில் சகஜம்.
அந்தவகையில் பிரதமர் மோடியும் தனது பிரசாரத்தின்போது ஈழத்தமிழர்கள் குறித்துப் பேசியதை மறந்து போகலாம்.
இது தவிர, இந்தியப் புலனாய்வுத் துறையின் ஆலோசனைகள் பாதுகாப்பு மற்றும் தேசியக் கொள்கை சார்ந்த எல்லைப்பாடுகள் என்பனவும் மோடியை கட்டுப்படுத்தவே செய்யும்.
எனவே மோடி வெல்வதற்கு முன்னதாக அவரிடம் எதிர்பார்த்ததை அப்படியே செய்வார் என்று இப்போது நாம் எதிர்பார்க்க முடியாது.
அப்படியானால் மோடியிருந்தால் என்ன? இத்தாலிய நாட்டின் லேடி இருந்தால் என்ன? என்று நீங்கள் கேட்பதும் நம் செவிகளில் விழவே செய்கிறது.
இங்குதான் ஓர் உண்மையை உணரவேண்டிய தேவையுள்ளது. அதாவது நாங்கள் எதிர்பார்த்ததை பிரதமர் நரேந்திர மோடி செய்யாவிடினும் சோனியா காந்தி போல எங்களுக்குத் துரோகத்தனம் இழைக்க மாட்டார் என்பது இங்கு கவனிக்கத்தக்க விடய மாகும்.
வன்னியுத்தம் நடந்தபோது, தமிழ் மக்களை காப்பாற்றுவது போல ஆளும் காங்கிரஸ் நடித்தது.
அவர்களின் நடிப்பிற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தாளம் போட்டார். முடிவில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வன்னிப்போரில் மாண்டு போயினர்.
அதன் பின்னர் கூட, சோனியா காந்தியோ, மன்மோகன் சிங்கோ எங்கள் மீது இரக்கம் கொள்ளவில்லை.
தமிழ் மக்களை அழிப்பது விடுதலைப் புலிகளை அழிப்பதாகும் என்பதே சோனியாவின் முடிவாகும்.
இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பியிருக்க அந்த நம்பிக்கை நடக்கும் என்பது போல, இடையிடையே இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை இலங்கைக்கு அனுப்பி அரசுடன் பேச்சு நடத்துவது போலக் காட்டாப்புக் காட்டி எங்களை கந்தறுத்த சோனியா காந்தி செய்த துரோகம் ஒரு போதும் மறப்பதற்குரியதல்ல.
இறுதிவரை ஈழத்தமிழ் மக்களின் மீட்பர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைமை, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவந்த தீர்மானத்தில் வாக்களிக்காததன் மூலம் தன் சுயரூபத்தைக் காட்டிக்கொண்டது.
சுயரூபம் வெளிப்பட; அதற்கான அழிவும் நெருங்கி வர, இந்திய வரலாற்றில் ஒரு போதும் கண்டிராத தோல்வியை சோனியா தலைமையிலான காங்கிரஸ் சந்தித்துக் கொண்டது.
போர் புரிந்து உயிர் பறித்தவர்களைவிட, அந்தப் போருக்கு உதவியவர்கள் முதலில் தண்டனை பெறுவதே நியதி.
பாரதப் போரில் சகுனி, துச்சாதனன் ஆகியோரின் மரணத்திற்குப் பின்னரே துரியோதனன் கொல்லப்படுகின்றான் அல்லவா!  அதுபோல தான் சோனியாவுக்கு நேர்ந்த அரசியல் அழிவும்.
ஆக, மோடி நமக்கு உதவாவிட்டாலும் எங்களுக்கு உபத்திரமாக இருந்த ஒரு கிரகம் கெட்டுப்போவது நல்லது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற சோதிட வாக்கின் பிரகாரம், மோடியால் நமக்கு நன்மை கிடைக்கும் என நம்பலாம்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmv1.html
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸை அப்படியே பின்பற்றும் பாரதிய ஜனதா!
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 05:53.43 AM GMT ]
இலங்கை விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னமாதிரியான கொள்கைகளை கடைபிடித்ததோ அதை அப்படியே பின்பற்றத் தொடங்கியுள்ளது பாரதிய ஜனதா.
முந்தைய மத்திய அரசு இலங்கையை தமது மதிப்புக்குரிய நேச சக்தியாக நட்பு நாடாக பார்த்தது.
இந்திய நாட்டு மீனவர்கள் 700 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட ஒரு கண்டனத்தைக் கூட முந்தைய காங்கிரஸ் அரசு தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கிற தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் வாழும் இலங்கையின் வடபகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க மறுத்ததுடன் இனப்படுகொலைக்கே துணை நின்றது முந்தைய மத்திய அரசு.
சொத்தை காரணங்கள்
இலங்கையிடம் இத்தனை பரிவு ஏன் என்ற கேள்விக்கு "இந்திய துணை கண்டத்து புவிசார் அரசியல்" "காலங்காலமாக கடைபிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை" என்றெல்லாம் காங்கிரஸ் பேரியக்கம் சப்பைக் கட்டிக் கட்டியது.
இந்த சப்பைக் கட்டுகளுக்கு தமிழகம் சம்மட்டி அடி கொடுத்து லோக்சபா தேர்தலில் சவக்குழிக்கே அனுப்பி வைத்தது.
பாதுகாவலன் பாஜக
காங்கிரஸை சவக்குழிக்கு அனுப்பி வைத்த போது தமிழர் உரிமை பிரச்சினைகளில் ஈழத் தமிழர் பிரச்சனைகளில் நாங்கள் பாதுகாவலராக இருப்போம் என்று இரட்சகரகர்களைப் போல பேசியது பாரதிய ஜனதா.
தமிழக மக்களுக்கு பாரதிய ஜனதா மீது நம்பிக்கை வரும் வகையில் காலங்காலமாக ஈழத் தமிழர் துயர் தீர்க்க போராடி வரும் வைகோ போன்றவர்கள் பிரசாரம் செய்தனர்.
மகிழ்ச்சி கூத்தில் இலங்கை
காங்கிரஸ் போய் பாஜக ஆட்சிக்கு வந்தது.. பாஜக வெற்றி பெற்றத் தொடங்கிய போதே இலங்கையில் மகிழ்ச்சிக் கூத்துகள் உச்சத்தை எட்டின.
பாஜகவின் மோடிக்கு வெற்றிக்கு முதல் வாழ்த்து மகிந்த ராஜபக்சவிடம் இருந்து வருகிறது.
டில்லிக்கு ராஜபக்ச
இப்போது உச்சமாக ராஜபக்சவையே டில்லி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறது பாஜக அரசு.
கேட்டால் அன்று காங்கிரஸ் சொன்ன அதே பழைய வேதாந்தமான "காலம்காலமாக கடைபிடிக்கும் வெளியுறவு கொள்கை" "இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்" "அண்டை நாடுகளுடனான நல்லுறவு" போன்ற வியாக்கியானங்களைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
உ.பி., ம.பிக்காக
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் அது ஹிந்தி பெல்ட் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற கட்சி. அதாவது உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில்.. ஏகோபித்த ஆதரவு பெற்ற கட்சி.
இந்த மாநிலங்கள்தான் சிங்களவர் மூதாதையர் உலாவிய பூமியாக சிலாகித்துக் கொள்கிறார்கள்.
சிங்களவர் தாய்வீடு
அதனால்தான் ம.பி.க்கும் உ.பி.க்கும் சிங்களவர்கள் தாய் வீட்டுக்கு வந்து போவதைப் போல சகஜமாக வருகிறார்கள்.
 ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பு தருகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா அரசு ராஜபக்சவுக்கு செங்கம்பளம் விரிக்கத்தான் செய்யும்.
இதை தமிழகம் வேதனையோடும் வெறுப்போடும் பார்க்கத்தான் வேண்டும் என்பது விதியாகிப் போனது.
அன்று காங்கிரஸ், இன்று பாஜக.
அன்று காங்கிரஸ் ஏதோ ஏதோ காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் படுகொலையை அரங்கேற்றியது.
போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
இன்று பாரதிய ஜனதாவும் ஏதோ ஏதோ காரணங்களுக்காக அதே போர்க்குற்றவாளிகளுக்கு பதாகை விரித்து வரவேற்பு கொடுக்கிறது.
அதாவது இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.
அதற்கு வரலாறும் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது என்பதை அரசியல் நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன என்பதே யதார்த்தம்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmwy.html

Geen opmerkingen:

Een reactie posten