இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள், தூதரக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.
குறிப்பாக சார்க் அமைப்பில் உள்ள 8 நாட்டு தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் சேக் ஹசீனா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கய், மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மோடி பதவியேற்பு விழா அழைப்பை ஜெயலலிதா ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை ஏற்கவில்லை என்றால் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அதன் பிறகு சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
http://www.newindianews.com/view.php?22eMM302lOK4e2DmKcb240Mdd304ybc3mD7e44Ol10226AA3
|
Geen opmerkingen:
Een reactie posten