தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 mei 2014

கிளிநொச்சியில் இராணுவக் கெடுபிடிகள்..

த.தே.கூ, த.தே.ம.மு தலைமை அலுவலகங்கள் இராணுவ முற்றுகை

வீதி ரோந்துகளில் ஈடுபடும் இராணுவத்தினர், சனசமூக நிலையம், ஆலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகமாக அவதானத்தினைச் செலுத்தியும் வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,  யாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மற்றும் 3 ஆம் குறுக்குத் தெருவுக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் என்பன இராணுவத்தினரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை முதல் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு அலுவலகத்திற்குள்ளும் எவரும் உள்ளே செல்லமுடியாதவாறு இரும்பிலான தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று (18) காலை தனது அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை, உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.Tna-03Tna-04Tna-05Tna-01Tna-02
 http://www.jvpnews.com/srilanka/69673.html

கிளிநொச்சியில் இராணுவக் கெடுபிடிகள்..

கிளிநொச்சி பகுதியினில் இலங்கைப்படையினர் அமுல்படுத்திவரும் கெடுபிடிகளால் அங்கு அச்சமான சூழல் நிலவி வருகின்றது.குறிப்பாக அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்றுள்ள இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூறும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அவ்வாறு சுவரொட்டிகளை யாரும் ஒட்டினால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் எனவும் திரும்பி வருவதை நினைத்துப் பார்க்கக்கூடாது எனவும் நாலாம் மாடிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் இதன்போது அச்சுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு தனியார் கல்வி நிலையத்தின் முன்பாக ஒன்றுகூடி நிற்கக் கூடாது நான்கைந்து பேர் நிற்கக்கூடாது எனவும் இரவில் நேரத்துடன் வீடு செல்ல வேண்டும் எனவும் மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறுதலை தடுக்கும் நோக்கில் படையினர் ரொந்து நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/69670.html

Geen opmerkingen:

Een reactie posten