தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 mei 2014

ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !


இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து பல இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். எனினும் சில இளைஞர்கள் இங்கே பேச ஆரம்பித்தபோதும் அவர்களை பேசவிடாது சில அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள். 

இன் நிலை இவ்வாறு இருக்க சில ஈழத் தமிழர்களும் இம் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. லண்டனில் வசிக்கும் சில தமிழ் இளையோர்கள் இலங்கை சென்று இம் மாநாட்டில் ஓசைபடாமல் கலந்துகொண்டுவிட்டு தற்போது லண்டன் திரும்பியுள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. அவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6816
சிங்கள பொலிசாரை அடித்தே கொன்ற 2 நபர்கள் இவர்கள் தான் !
12 May, 2014 by admin
குருநாகல் பிரதேசத்தில் கடந்த 6 ஆம் திகதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை அடித்துகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை பொலிஸார் நேற்று(11) வெளியிட்டுள்ளனர். வேவெல்தெனிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் 30 – 32 வயதுடையவர்கள் எனவும் சுமார் 5.4 அடி உயரமுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை போக்குவரத்து பொலிசார் ஒருவரை, மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்து அடித்தே கொன்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நபர்கள் என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten