தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 mei 2014

முன்னர் காணமல்போன மெட்டல் டிடெக்டர் ஜெயக்குமாரி வீட்டில் இருந்தது !



கோபி, அப்பன், மற்றும் தெய்வீகன் ஆகியோரை தாம் நெடுங்கேணிக் காட்டில் வைத்து சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மேலும் சில இரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. கோபி (விபூஷிகாவின் தாயார்) ஜெயக்குமாரி வீட்டில் தங்கியிருந்தார் என்றும், அவரது வீட்டில் முன்னர் முல்லைத்தீவில் காணமல் போனதாக கூறப்படும் 5 "மெட்டல் டிடெக்டர்களில்" ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியே அவரை பூசா முகாமில் இன்றுவரை அடைத்து வைத்துள்ளார்கள் சிங்கள் புலனாய்வுப் பிரிவினர். இதுதொடர்பான மேலதிகத் தகவல்கள் இதோ !

முல்லைத்தீவில் பல கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஒரு நிறுவனத்தின் குடோனில் இருந்து 6 மாதங்களுக்கு முன்னதாக சுமார் 5 மெட்டல் டிடெக்டர்கள் காணாமல் போயுள்ளது. நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை கண்டறியக்கூடிய இந்த மெட்டல் டிடெக்டர் சாதனத்தை யார் திருடினார்கள் என்று தெரியாத நிலையில், அதன் சீரியல் நம்பர் உட்பட அனைத்து விபரங்களையும் அன் நிறுவம் பொலிசாருக்கு கொடுத்திருந்தார்கள். (serial numbers N-21838, N-21741, N-21844, N-17491 and N-17804 ) அன்றைய தினம் இரவு நேரக் காவலில் இருந்ததாகக் கூறப்படும் 2 இளைஞர்களை பொலிசார் பல மாதங்களுக்கு முன்னர் விசாரித்து இருந்தார்கள். இவர்களில் ஒருவர் சிங்களவர் என்பதும் மற்றைய நபர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். இதில் குறித்த தமிழ் இளைஞர் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஆவார். 

இன் நிலையில் புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டியெழுப்ப, முனைந்ததாக இராணுவத்தால் கூறப்படும் நபரான கோபி தனக்கு தெரிந்த நபர் ஒருவர் மூலமாக இந்த 5 மெட்டல் டிடெக்டர்களையும் அங்கிருந்து எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் இராணுவம் முன்னேறி வரும் காலகட்டங்களில்(2009) பல இடங்களில் தமது ஆயுதங்களை புதைத்திருந்தார்கள். அவற்றில் சில எங்கே புதைக்கபட்டுள்ளது என்பது போன்ற விபரம் கோபிக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் போர் முடிவுற்று 5 வருடங்கள் ஆகிவிட்டதால், பல இடங்கள் மாற்றம் பெற்றுவிட்டது. அதனால் குறித்த இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க கோபியால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவற்றை இலகுவாக கண்டுபிடிக்கவே இந்த மெட்டல் டிடெக்டர் சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூறிவருகிறார்கள். 

இதில் ஒரு மெட்டல் டிடெக்டரை அவர்கள் ஜெய்குமாரில் வீட்டில் தாம் கண்டு எடுத்ததாகவும், இதன் காரணமாகவே அவர் விடுதலைப் புலிகளுக்கு துணைபோனார் என்றும் இலங்கை புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள் என, வழக்கை நேரில் பார்த்த கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேக தகவலை வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் பல தகவல்கள் உள்ளது இருப்பினும் சில தனி நபர்கள் பாதுகாப்பு கருதி நாம் அதனை செய்தியாக வெளியிடவில்லை என்பதனையும் இங்கே அறியத்தருகிறோம்.

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6817

Geen opmerkingen:

Een reactie posten