தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

ராஜபக்ச அழைக்கப்பட்டதை ஏற்கவில்லை!- விஜயகாந்த் !

[ பி.பி.சி ]
நரேந்திரமோதி பிரதமராகப் பதவியேற்கும் விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்ததை தே.மு.தி.க ஏற்றுக்கொள்ளவில்லையென தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சவை மட்டும் அழைக்கவில்லை. எட்டு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகளும் இந்த விழாவில் பங்கேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவை மட்டும் இந்த விழாவில் பங்கேற்க அழைத்திருந்தால் நிச்சயமாக தேமுதிக இந்த விழாவில் பங்கேற்காது என்றும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமென மோடியிடம் மீண்டும் வலியுறுத்தப்போவதாகவும் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkq1.html

Geen opmerkingen:

Een reactie posten