யாழ்ப்பாணத்தில் இரானுவத்திற்கு ஆட்சேர்க்கும்; முயற்சிகள் படுதோல்வி அடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்சேர்க்கும்; நடவடிக்கைகளை வேறுவழிகளில் இரானுவம் ஆரம்பித்துள்ளது.
இதனொரு அங்கமாக இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டமொன்று நேற்றுக் காலை யாழ் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சிலர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இராணுவத்தினருhடாக அரச வேலை வாய்ப்பு எனும் பெயரிலும் பல இடங்களிலும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றிருந்தது. இதன் போதும் பலரும் இணைத்தக் கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று கடந்த வாரம் யாழ் மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆடசேர்க்கும் நடவடிக்கைகள் நேரடியாகவே நடைபெற்றது.
இதன் முதற்கட்டமாக யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நேர்முகத் தேர்வு நடைபெற்று அதிலும் சிலர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இராணுவத்தினருக்கு பலரும் இணைத்துக் கொள்ளலாமென இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியடைந்திருந்த நிலையில் அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் வகையில் தற்போது வேறு வழிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை இரகசியமாக நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதேச செயலர்களிடம் இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் போதுயாழ் மாவட்டத்தில் இராணுவத்திற்கு ஆடசேர்க்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு கிராமசேவகர் ரீதியாக தொடர்ந்தும் பலவழிகளிலும் முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை முதல் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவு ரீதியாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவகர்களுக்கு இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பில் இராணுவத்தினரால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் விளக்கமளிக்கப்படவும் உள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் போது இராணுவத்தில் இணைந்து கொள்வதன் நன்மைகள் மற்றும் இராணுவ சலுககைகள் என்பன தொடர்பிலே அதிகளவில் விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து கிராமசேவகர் பிரிவுகள் ஊடாக இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZkqz.html
Geen opmerkingen:
Een reactie posten