[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 02:33.43 PM GMT ]
ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஆளும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தின் பணிகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஊவா மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தை கலைப்பது குறித்து இதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYls7.html
புலம்பெயர்ந்தோர் தொடர்பான இலங்கையின் தடையை இந்தியா ஏற்றுள்ளது – அமெரிக்கா நிராகரிப்பு
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 12:00.28 AM GMT ]
இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே நடைமுறையை ஈரானும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் தடையை தமது நாட்டில் நடைமுறைப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் முன்னதாக கனடா இந்த தடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவும் இந்த தடையை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக, இலங்கையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
2ம் இணைப்பு
இலங்கை பாட்டுக்கு இந்தியாவின் பக்கத் தாளம்: தமிழ் அமைப்புகள் வேதனை
இலங்கை அரசு ‘தீவிரவாதிகள்’, ‘தீவிரவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டுள்ள பெயர் பட்டியலையொட்டி, இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தமிழ் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.
உலகெங்கிலும் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை ‘தீவிரவாத’ முத்திரை குத்தி இலங்கை அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
எடுத்த எடுப்பிலேயே, இந்த அறிவிப்பை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்ட கனடா, இலங்கையின் சுற்றறிக்கையை உதாசீனப்படுத்தி விட்டது. அதே வழியை அமெரிக்காவும் கடைபிடிக்க, இந்தியா மட்டும் இலங்கையின் உத்தரவை ‘தோப்புக்கரணம்’ என்றதும், ‘எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று போடத் தொடங்கி விடும் அடக்கமான சீடனைப் போல் செயல்பட்டு வருவதாக தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இது தொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் நிஷா பிஸ்வாலை வாஷிங்டனில் சந்தித்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பட்டியலில் உள்ள தமிழ் அமைப்புகளும், தனிநபர்களும் இலங்கையில் மீண்டும் தனி ஈழப் போரை புதுப்பிக்க நிதி திரட்டி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முடக்குமாறும் இலங்கை அரசு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் விளைவாக, சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவரை இந்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதையும் நிஷா பிஸ்வாலிடம் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYltz.html
Geen opmerkingen:
Een reactie posten