தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 mei 2014

இலங்கை அகதிகளை மலேஷியா நாடு கடத்தக் கூடாது � மனித உரிமை அமைப்பு!


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் நாடு கடத்தக் கூடாது என மலேஷிய மனித உரிமை அமைப்பான சுவாரம் கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மலேசிய அரசாங்கம், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து நாடு கடத்துவில் முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் சில பலம்பொருந்திய மலேஷிய அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு அமைய காவல்துறையினர் செயற்பட்டு வருவதாக சுவாரம் அமைப்பின் பேச்சாளர் ஆர்.தவராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மூன்று இலங்கையர்களை மலேஷிய அரசாங்கம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிருபாநாதன், கிருபாகரன் மற்றும் குசாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கக் கூடும் எனவும், அவ்வாறானவர்கள் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடலாம எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலேஷியாவில் புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களை, இலங்கை அரசாங்கம் இலக்கு வைத்து செயற்பட்டு வருவதாகவும், அதற்கு சில மலேஷிய அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்களின் கணனிகளை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களின் கணனிகள் பறிமுதல் செய்யப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு புறம்பான வகையில் காவல்துறையினர் செயற்பட்டுள்ளதாக தவராஜன் தெரிவித்துள்ளார்.
21 May 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1400659086&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten