இலங்கையின் வட, கிழக்கு உட்பட அனைத்து காட்டுப் பகுதிகளிலும் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் ணின்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், எந்தவொரு குழுவும் சுயமாகவோ அல்லது படை ணிகாம்களுக்குள் நுழைந்தோ பயிற்சிகளைப் பெற ணிடியாது என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்திக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்தது.
இந்த கூற்று ஆதாரமற்றது என தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, பயங்கரவாத அமைப்பொன்றுக்கு உதவ வேண்டிய எந்தவொரு தேவையும் இலங்கைக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கவே உகந்த இடம் இலங்கையில் இல்லாத நிலையில், பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
http://www.jvpnews.com/srilanka/68095.html
Geen opmerkingen:
Een reactie posten