தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 mei 2014

தம்புள்ளை பள்ளிவாசல் ஒருபகுதி இடிக்கப்பட்டது: சுமங்கல தேரர் நேரடி கண்காணிப்பு!


தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதை உளவாளியான ஜாகீர் உசேன் ஒப்புக்கொண்டார்
[ புதன்கிழமை, 07 மே 2014, 07:56.09 AM GMT ]
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின் உத்தரவின்பேரில், இந்த இடங்களின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியதாகவும், அவை தெளிவாக இல்லாததால் மீண்டும் படம் பிடிக்க சென்னை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதற்காக வாடகைக்கு வீடு தேடி வந்ததாகவும் ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இதுவரை 6 முறை தமிழகம் வந்துள்ளதாகவும், இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜாகீர் உசேனை 3 நாட்கள் காவலில் எடுத்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 நாள் காவல் முடிந்து நீதிமன்றத்தில் நாளை மீண்டும் ஜாகீர் உசேன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் ஒருபகுதி இடிக்கப்பட்டது: சுமங்கல தேரர் நேரடி கண்காணிப்பு
[ புதன்கிழமை, 07 மே 2014, 12:18.19 AM GMT ]
சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், பெக்கோ இயந்திரங்கள் பள்ளவாசலை அண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றை பொலிசாரின் பாதுகாப்புடன் இனாமளுவே சுமங்கல தேரர் நேரடியாக நின்று வழிநடத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளைப் பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வகையில் வீதியொன்றை திட்டமிட்டு, தற்போது பள்ளிவாசலின் இரு மருங்கிலும் இயந்திரங்களைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளதாக அப்பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் றஊப் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பள்ளிவாசல் பராமரிப்பாளர் (கதீப்)  பயன்படுத்தும் மலசலகூடம் மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள கட்டிடங்கள் தற்போது தகர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பள்ளிவாசலைத் தகர்க்காமல் வீதியை வளைத்துக் கொண்டு போவதாக வீதி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
எனினும் இன்று அதிகாலைக்குள் அப்பிரதேசத்திலிருந்து பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கிவிடும் வகையில் இனாமளுவே சுமங்கல தேரரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten