ஊடக சுதந்திரத்தில் மாத்திரமல்லாது ஜனநாயகம் உட்பட ஏனைய உரிமைகள் தொடர்பிலும் இலங்கையில் பல காலங்களுக்கு முன்னர் காணப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக தரப்படுத்தலின் மூலம் இது உறுதியாகி இருப்பதாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
உலக ஊடக தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளது.
இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்புகளை சுதந்திர ஊடக இயக்கம் உறுதிப்படுத்துகிறது. ஊடக சுதந்திரம் என்பது ஏனைய அனைத்து சுதந்திரங்களிலும் அடிப்படையானது.
ஊடக சுதந்திரம் சகல மக்களினதும் மனித உரிமைகளுக்காக போராடும் போராட்ட களமாகும்.
உலக ஊடக தினம் என்பது ஊடகவியலாளர்களுக்கும், ஜனநாயகத்தை விரும்பும் அனைவருக்கும் ஒரு முக்கிய தினமாகும்.
இலங்கையில் பல காலங்களாக இருந்து வந்த சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பன காணாமல் போயுள்ள நிலையிலேயே நாம் பயணித்து கொண்டிருக்கின்றோம்.
உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சகல ஊடக புள்ளி விபரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தளமாக கொண்ட சீ.பி.ஜே.விற்கு அமைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்காத நாடுகளில் இலங்கை 4 வது இடத்தில் உள்ளது.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் புள்ளி விபரங்களின் படி ஊடக சுதந்திரம் இல்லாத 177 நாடுகளில் இலங்கை 165 வது இடத்தில் உள்ளது.
ஊடக சுதந்திரத்தை அடக்குவதன் மூலம் இலங்கையில் ஜனநாயகமும் மக்களின் வாழக்கை சுதந்திரம் மாத்திரமல்லாது, உரிமைகள் சம்பந்தமாகவும் இலங்கை பின்தங்கியிருப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலங்கை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கொடூரமான மோதலில் சிக்கியிருந்த நாடாகும். அமைதி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற கனவு இலங்கையில் வாழும் சகல மக்களுக்கு உரித்தானது.
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே இந்த கனவை நனவாக்க முடியும் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYmu5.html
Geen opmerkingen:
Een reactie posten