தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 mei 2014

லண்டனில் கமலேஸ் சர்மாவை சந்தித்த சாமல் ராஜபக்ச


லண்டனுக்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, கொமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
லண்டனின் மால்போரொ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சட்ட வரைவுகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012, 2013ம் ஆண்டுகளில் இலங்கைக்கு விஜயம் செய்த கொமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா, நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, நீதவான் நியமனங்கள் தொடர்பிலான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றின் சுயாதீனதன்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டக் கூடிய வகையிலான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது எனவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கொமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்த இலங்கை பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியமையை கமலேஸ் சர்மா வரவேற்றுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten