கடந்த இரு வருடங்களாக குமார் தமிழ் கொடியை வருடாந்த நிகழ்வுக்குச் செல்கின்றபோது தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கின்றார். “சிறிலங்காவைப் பொறுத்தவரை வடக்கு கிழக்குப்பகுதிகளில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்திருக்கின்றார்கள்.
இந்தக் கொடியானது தமிழர்களின் சுதந்திர அரசினை உருவாக்க முனைகின்ற ஒரு அமைப்பினைக் குறிக்கும் தேசியச் சின்னமாகும” என குமார் Toronto Sun பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார். குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் Jim Robertson அங்கு நடைபெறவுள்ள நிகழ்வில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளினது கொடிகள் வைக்கப்படலாம் என தீர்மானித்திருந்தார். அத்துடன் கடந்த வருடம் குறிப்பிட்ட மாணவன் தவறுதலாக தமிழ் கொடியை கொண்டுவந்திருக்கின்றார் எனவும் நினைத்திருக்கின்றார் எனத் தெரிவித்திருக்கின்றார்.
பாடசாலை அதிபரின் கருத்துப்படி குறிப்பிட்ட கொடியானது 1983 – 2009 வரையில் சிறிலங்கா இராணுவத்துடன் சண்டையிட்ட இராணுவக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது எனத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் அதிபர் “ நாம் அரசியலில் ஈடுபடவில்லையெனவும், மாணவர்கள் எவரும் பயமுறுத்தப்படுவதை நான் விரும்பவில்லை” எனவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் மாணவனான மார்க்கண்டு “ தமிழ் கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை. குறப்பிட்ட அமைப்பைக் கனடிய அரசு கடந்த 2006ம் ஆண்டு பயங்கரவாதி அமைப்புகளின் பட்டியிலில் சேர்த்து விட்டது” எனக் கூறியிருக்கின்றார்.
மேலும் மாணவனாகிய குமார் “ என்னால் எனது கொடியை கொண்டுவர முடியவில்லையெனில் எப்படி எனது கலாச்சாரத்தை நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் எனத் தனது சக மாணவர்களைக்; கேட்டுள்ளார் எனவும் அதற்கு அந்த மாணவர்கள் குமார் கொடி கொண்டுவருவது தமக்குப் பிரச்சினையில்லையெனத் தெரிவித்திருக்கின்றார்கள் எனவும் தெரியவருகிறது. இதன்பின்பு குறிப்பிட்ட நிகழ்வின்போது குமார், தமிழ் கொடியின் சின்னமடங்கிய சேட் அணிந்து சென்றபோது ஆசிரியர் குமாரை உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகும்படி கேட்டிருக்கின்றார். குறிப்பிட்ட சம்பவமானது தன்மை வருத்துகின்றது எனவும் “பல்கலாச்சராத்தைத் தழுவிய கனடாவில் என்னால் எனது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க முடியவில்லையெனில் எங்கே நாம் எமது கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்வது” எனத் தெரிவித்திருக்கின்றார் குமார்.
- See more at: http://www.canadamirror.com/canada/25494.html#sthash.wm2jzDPp.dpuf
Geen opmerkingen:
Een reactie posten