[ திங்கட்கிழமை, 05 மே 2014, 12:18.20 PM GMT ]
மத்தள விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இன்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் உடனடியாக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபா ரொக்கம் மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூலை 2 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 வயதான பிரேமசிறி பரணவிதான, 32 வயதான துவான் ரம்சான் பஹமன், 25 வயதான மதுஷ திலான், பிந்து ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlx4.html
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு பிரித்தானியாவும் காரணம்: அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 12:11.36 PM GMT ]
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கையின் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு அடிப்பணிந்தவர்களாக பிரித்தானியா வைத்திருந்தமையும் இதற்கு ஒரு காரணமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளில் இன வன்முறைகள் என்ற கருப் பொருளில் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கௌரவம் மனித உரிமை மற்றும் சமாதான அமைப்பின் உறுப்பினரான கலாநிதி ரெண்டி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது இது தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உலக நாடுகளில் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் பக்க சார்பானதாக உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlx3.html
Geen opmerkingen:
Een reactie posten