தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

இலங்கையரான பாக்கிஸ்தான் உளவாளியின் மனைவியை பாதுகாக்கும் பொலிஸ் !

அட கடவுளே ! புலி உறுமுது போஸ்டர் உதயன் போஸ்டர் என்று தெரியாத நபர்கள் !
05 May, 2014 by admin
எதனை தான் செய்தியாக்குவது என்று தெரியாத நிலை தமிழ் ஊடகப்பரப்பில் இருக்கிறது. யாழில் மீண்டும் புலி உறுமல் என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்கள் என்றும், அதனை கிட்டச் செறு பார்க மக்கள் பயப்பிடுவதாகவும் பிரபல இணையங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலை என்ன என்று இதுவரை ஆவர்கள் ஆராய தவறிவிட்டார்கள். இதுதொடர்பாக நாம் அவர்களுக்கு அறிவித்து இருந்தோம். ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை இந்த பிழையான செய்தியை தூக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அதன் பின்னரே நாம் இதனை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. யாழில் மீண்டும் புலி உறுமுது என்ற போஸ்டர் இனந்தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். உண்மையில் சொல்லப்போனால் , இது ஒரு அனாமதேய சுவரொட்டி அல்ல.

மீண்டும் புலி உறுமல் என்னும் தலைப்பில், யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை ஒருசெய்தியை வெளியிட்டுள்ளது. அதனை அவர்கள் சில கடைகளில்(அதாவது அவர்கள் பேப்பர் விற்கும் கடைகளில்) தொங்கவிட்டுள்ளார்கள். இதனை உடனே சுவரொட்டி அடித்து யாரோ ஒட்டிவிட்டதாக இந்த இணையங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது பிழை என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பது பெரும் கவலைக்குரிய விடையமாக உள்ளது. இதோ அந்தப் போஸ்டர்... உதயனின் போஸ்டரும் இணைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்) 



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6781

இலங்கையரான பாக்கிஸ்தான் உளவாளியின் மனைவியை பாதுகாக்கும் பொலிஸ் !
05 May, 2014 by admin
இலங்கை நபரான முகமது ஜாகீர் உசேன், பாக்கிஸ்தானுக்காக உளவுபார்த்தான் என்று தமிழக பொலிசார் அவரை சமீபத்தில் கைதுசெய்தார்கள் என்ற விடையம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன் நிலையில் இவர் தொடர்பான தகவல்களை இலங்கை அரசு கொடுக்க மறுத்துவருவதாக சென்னையை சேர்ந்த கியூ பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவ்விடையத்தில் ஒத்துழைக்க தாம் தயார், என்று இலங்கைப் பொலிசார் கூறியுள்ளார்கள். இதேவேளை முகமது ஜாகீர் உசேன் வசித்து வந்த சொந்த ஊருக்கு, சில ஊடகவியலாளர்கள் செய்தி திரட்டச் சென்றுள்ளார்கள். ஆனால் முகமது ஜாகீர் உசேன் மனைவியான பாத்திமா ரீசா அங்கே அவரது வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் முகமது ஜாகீர் உசேன் கைதானவேளை , பாத்திமாவை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அவரது வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றுவிட்டார்கள் என்று அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. இவரை எங்கே கொண்டு சென்று இலங்கை புலனாய்வுத்துறையின் மறைத்துவைத்துள்ளார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் இந்திய அதிகாரிகள் மேலும் ஆத்திரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படாமல் இது நடைபெறவேண்டும் என்று டெல்லி வட்டாரங்கள் தமிழகப் பொலிசாருக்கு அறிவுறுத்தியும் உள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6780

Geen opmerkingen:

Een reactie posten