இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் செய்தி தொடர்பாளர், இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் உட்பட்டவர்கள் இந்த விசாரணைக்கு இணங்கமுடியாது என்று கூறிவருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமக்கு அந்த நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உண்மையை கண்டறியும் குழுவை அமைக்க அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதால், சர்வதேச விசாரணைக்கும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான குழு அமைப்புப்பணிகள் இந்த மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmq3.html
Geen opmerkingen:
Een reactie posten