இராணுவ முகாமில் இசைப்பிரியா மற்றும் உசாளினி என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் இரு பெண்கள் தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.
ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் யார், எவர் என்பது தொடர்பில் நாங்கள் அறியோம். அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாலினி என்பதைக் கூட ஊடகங்கள் வாயிலாகவே நாம் அறிந்து கொண்டோம்.
இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பிலும் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது.
இது தவிர, குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என்று இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmq0.html
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vhSYghHMBG0dB4WosdGFzb2BJmPvoRDrkc-iibTt5ltsYUnkDHt94dhtq6StTpXEmXQt-3Gc0kUBEn3kB6Zk3mlHon3xPNMeW1p8jcIgCg24VC-XL8Y3zOnzTO_zOY3UXtW-nqE3D4MQ=s0-d)
இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர். இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்கிறார்கள் அவரது பெற்றோர். இச்செய்திகள் பரவலாக பல தமிழ் ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இருப்பினும் ஆங்கில இணையத்தளங்களோ இல்லை சிங்கள இணையத்தளங்களோ இச் செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தது. ஆனால் இதனை சிங்களப் புலனாய்வாளர்கள் விட்டபாடாக இல்லை !
இதேவேளை முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இசைப்பிரியாவுடன் இருந்த மற்றுமொரு பெண் தொடர்பில் ஊடகங்களின் வெளியான புகைப்படத்தை காண்பித்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.புலனாய்வு பிரிவினருடன் இராணுவத்தினரும் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உஷாலினி வீட்டில் புலனாய்வு பிரிவினர் புகுந்தார்கள் !
21 May, 2014 by admin

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6865
Geen opmerkingen:
Een reactie posten