[ வியாழக்கிழமை, 22 மே 2014, 02:42.13 AM GMT ]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், இந்திய தமிழர்களான மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் காப்பாற்றவில்லை. இதனால் தான் காங்கிரஸ், தி.மு.க.வை மக்கள் புறக்கணித்தார்கள்.
தமிழக முதலமைச்சர், தமிழர் நலன் கருதி ஏதாவது கோரிக்கை வைத்தால் மோடி நிச்சயமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.
தமிழக முதலமைச்சரின் உதவி மத்திய அரசுக்கு தேவை இல்லை. அதனால் செவிசாய்க்க மாட்டார் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை தமிழர் நலன் பாதுகாக்கபடும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்வு ஏற்படும். நதிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்து நாங்கள் தெரிவித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmu6.html
ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 05:44.41 AM GMT ] [ விகடன் ]
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்ச நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்று கூறியிருந்தார்.
கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்றும், இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmv7.html
Geen opmerkingen:
Een reactie posten