தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 mei 2014

இலங்கை விடயத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் யார்?

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது.
எனினும் மோடியின் அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் என்பதை உள்ளூர் மற்றும் சர்வதேச சாதகங்களே தீர்மானிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நரேந்திர மோடி இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடுவதன் முன்னர் இந்தியாவில் உள்ள பிராந்தியங்களின் பிரச்சினைகளை ஒரு நிலைக்கு கொண்டு வரவேண்டியிருக்கும்.
எனவே அவர் இலங்கை விடயத்தில் தலையிட ஒருவருட காலமாவது செல்லும் என்பதே மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தவேளையில் அமெரிக்க கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே ஐக்கிய நாடுகளில் அமரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான யோசனைக்கு மோடி ஆதரவு வழங்கமாட்டார் என்று ராஜபக்ச அரசாங்கம் எண்ணுகிறது.
எனினும் இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அடுத்து வரப்போகும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் கையிலேயே தங்கியுள்ளது என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.
இந்தநிலையில் தேசியபாதுகாப்பு ஆலோசகராக யாரை மோடி நியமிப்பார் என்பதும் இந்த விடயத்தில் செல்வாக்கும் செலுத்தும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவ்சங்கர் மேனன், மஹிந்த ராஜபக்சவின் நண்பராவார். எனவே அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான விடயங்களே முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் அஜித்குமார் டொவால், முன்னாள் வெளியுறவு செயலர் கனவால் சிபால், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் 1988 ஆம் காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த எஸ் ஜெய்சங்கர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சியாம் ஷரன், அத்துடன் முக்கியமானவராக கருதப்படும் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராக 1984 ஆம் ஆண்டில் பதவிவகித்த ஹார்டீப் பூரியின் பெயரே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக பேசப்படுகிறது.
இவர் அண்மையில் வெளியிட்ட கருத்தில், இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படலாம். எனினும் தமிழர்களுக்கு எதிராக செயற்பட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே பூரி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்ட்டால் அது இலங்கை விடயத்தில் மாற்றம் ஒன்றை கொண்டு வரலாம்.
அதேநேரம் இலங்கை சீனாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பு உடன்பாடுகள் மற்றும் பாகிஸ்தான் சட்டத்தரணி ஒருவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு எதிராக செயற்பட வாடகைக்கு அமர்த்தியுள்ளமை போன்ற விடயங்கள், புதிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டவைகளாக இருக்கும்.
இலங்கையை பொறுத்தவரை தொடர்ந்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் விடயங்களில், பழைய முன்னெடுப்புகளையே மேற்கொள்ளும் என்பது உறுதி.
அதற்கு பதிலாக மோடி அரசாங்கம் சீனா, பாகிஸ்தான் விடயங்களில் எவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்று இலங்கை செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்திய தேர்தலில் தோல்வி கண்ட காங்கிரஸ் அரசாங்கம், தமது இறுதிக்காலத்தில் இயல்பாக இரண்டு வருட காலத்துக்கு நீடிக்கப்படும் விடுதலைப் புலிகளின் தடையை ஐந்து வருடங்களுக்கு நீடித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் அரசாங்கம் பதவிக்கு வந்தால், இலங்கைக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கும் அல்லது. இலங்கை எதிரான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்கும் என்ற அடிப்படையிலேயே காங்கிரஸ் அரசாங்கம் புலிகள் மீதான தடையை ஐந்து வருடங்களுக்கு நீடித்திருக்கலாம் என்றும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmv3.html

Geen opmerkingen:

Een reactie posten