இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் : டுவிட்டர் தளத்தில் மோடி
[ சனிக்கிழமை, 17 மே 2014, 11:41.10 AM GMT ]
அவரது டுவிட்டர் தளத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பதிவினை செய்துள்ள நரேந்திரமோடி ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYep3.html
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் புலிகளுக்கு எதிரான தடை மாறாது
[ சனிக்கிழமை, 17 மே 2014, 12:37.30 PM GMT ]
தனிநாட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக்கரு விடுதலைப் புலிகளின் ஈழ ஆதரவாளர்களின் மத்தியில் மாறவில்லை என இந்திய புலனாய்வுப் பிரிவினர் இந்த அரசுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
அரசாங்கம் மாறினாலும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்களை இரத்துச் செய்ய போவதில்லை என அந்த தகவல்கள் கூறியுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் கடந்த 14 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை 5 ஆண்டுகளுக்கு நீடித்தது.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYep7.html
Geen opmerkingen:
Een reactie posten