[ செவ்வாய்க்கிழமை, 06 மே 2014, 10:27.16 PM GMT ]
இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க துணைபுரிவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அனாமதேய துண்டுப்பிரசுங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதன் போது இலங்கை இராணுவத்தினர் இறுதியுத்தத்தில் மேற்கொண்ட தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் யுத்த காலங்களில் பாலியல் கொடுமைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி சைனாப் பங்குரா அண்மையில் முன்வைத்த அறிக்கை விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதில் இலங்கை சார்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர பிரதி சவேந்திரசில்வா கலந்துக் கொள்கிறார்.
மேலும் நியுசிலாந்து கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
யாழ். பல்கலையினுள் மாணவர்களை அச்சுறுத்தும் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்
[ புதன்கிழமை, 07 மே 2014, 12:11.05 AM GMT ]
அந்த சுவரொட்டிகளில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதை அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், அதற்குத் துணை செய்யும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் விரிவுரைகளுக்கு சென்ற போது நேற்றுக் காலை இவ் எச்சரிக்கை துண்டுபிரசுரங்களை காண நேர்ந்துள்ளது.
இத் துண்டு பிரசுரங்கள் அதற்கு முந்தைய இரவில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் எனவும் இது யாரால் எவ்வாறு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டது என்பது தொடர்பில் மாணவர்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்ற நிலையில் மீண்டும் பயங்கரவாதம் இந் நாட்டில் தலை தூக்க அனுமதிக்க முடியாது.
அழிக்கப்பட்ட புலிகளால் நாமும் இந்த தேசமும் எத்தனையோ கொடூரங்களை சந்தித்தோம் என்று இந்த உலகமே நன்றாக அறியும். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மீண்டும் புலிகளை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
அவ்வாறான செயற்பாடுகளை தூண்டும் பேராசிரியர்கள் மாணவர் ஒன்றியத் தலைவர்களை நாம் நீண்டகாலமாக அவதானித்து வந்ததுடன், அவர்களுக்கு நேரடியாக எச்சரிக்கையும் செய்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து தான் செல்கின்றது.
பேராசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் தான் மாணவர் ஒன்றியங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக நாங்கள் அறிகின்றோம். அவர்களுக்கு நாங்கள் இறுதியான ஒரு எச்சரிக்கை விடுகிறோம் என அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten