தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 mei 2014

அரசின் சூழ்ச்சி பிசுபிசுத்தது! யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுகள்

தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது.

இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர்.
முன்னதாக கைலாசபதி அரங்கை ஒதுக்கி வழங்குவதில் இழுபறி நிர்வாகத்திற்கும் ஏற்பாட்டாளர்களிற்குமிடையே நிலவிய போதும் பின்னர் சுமுகநிலை ஏற்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தை அண்டிய சூழலெங்கும் படையினர் குவிக்கப்பட்டிருந்த போதும் அது எதனையும் பொருட்படுத்தாது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Jaffna-UsJaffna-Us-01Jaffna-Us-02

Geen opmerkingen:

Een reactie posten