இந்திய ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வெற்றியைக் கொடுக்க வேண்டும்: யோகேஸ்வரன் எம்பி
[ சனிக்கிழமை, 17 மே 2014, 08:27.50 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் தமது வாழ்த்துச் செய்தியில்,
தமிழ் மக்களின் தாய் நாடாக கருதப்படும் தமிழக மாநிலத்தில் ஆட்சியில் அமர்ந்து இலங்கை தமிழ் மக்களின் துன்பியலை துடைக்க மாபெரும் நடவடிக்கைகளை தமது ஆட்சியின் மூலம் மேற்கொள்ளவரும் தமிழக மாநிலத்தாய் மண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மூன்றாவது இடத்தை பெற்ற ஒரு மாபெரும் கட்சியாகவும்,
தமிழகத்தில் என்றுமில்லாதவாறு பெரும் தொகை ஆசனத்தை பெற்ற கட்சியுமாகவும் திகழ்ந்துள்ளமையை இட்டு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் அம்மையார் அவர்கட்கும், அவரது கட்சிக்கும் எங்களது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
அத்தோடு இந்திய நாட்டில் பாரதீய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி பீடம் ஏறியுள்ளமை உலக இந்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
82 வீதம் இந்து மக்களை கொண்ட இந்திய திருநாட்டில் இந்து மக்களின் கட்சியாக கருதப்பட்ட பாரதீய ஜனதா கட்சியும், இந்து மக்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாண்புமிகு நரேந்திரமோடி ஐயா அவர்களின் வெற்றியும் இந்து மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்திய தேர்தலில் மதவாத கட்சி என்று பலவாறு எதிராக போட்டியிட்ட ஆளும் கட்சியாலும், ஏனைய எதிரான கட்சிகளாலும் தேர்தலில் விமர்சிக்கப்பட்ட இப்பாரதீய ஜனதா கட்சி ஏனைய கூட்டு கட்சிகளின் ஆதரவு இன்றி தனிக் கட்சியாக பெரும்பான்மை ஆசனத்தை பெற்றது. இந்து மக்களின் தாய் நாடு தன் பெருமையை அனுபவிக்கும் காலம் உதயமானதை எடுத்துக்காட்டியுள்ளது.
அதேபோன்று இலங்கை தமிழீனத்தின் விடுதலைக்கான பல தீர்மானங்களை கொண்டு வந்து ஏனைய சில தலைவர்களை போன்று போலி நாடகமாடாது தமது உண்மையான உணர்வை இலங்கை தமிழ் மக்கள் சார்பாக அன்றும் இன்றும் வெளியிட்டு கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஆட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் எம் தமிழ் மக்களின் தாயான மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில் அமர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வெற்றி தமிழீனத்தை மீண்டும் தலைநிமிர வைத்துள்ளது.
இவ்விரு வெற்றியை இட்டு இலங்கை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதுடன், இவ்வெற்றியானது இலங்கை தமிழர்களின் அழிவுக்கும், அவர்களது வாழ்வில் நிம்மதியின்மைக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய இந்திய அரசியல் கட்சிக்கு இறைவன் கொடுத்த ஒரு தண்டனை என்று இலங்கை தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தற்போது அமையவுள்ள இந்திய நாட்டில் அரசாங்கமான மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் அமையும் பாரதீய ஜனதா கட்சியும், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி பீடமேறும் தமிழகத்தின் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியும் இணைந்து,
பல சகாப்த காலமாக இலங்கை நாட்டில் அடிமையாக, உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகமாக இலங்கை அரசாங்கத்தால் வழிநடாத்தப்படும் இலங்கையின் பூர்வீக குடிகளும், தேசிய இனமுமான எங்கள் தமிழ் இனத்தின் துன்பியலை நீக்கும் வகையில்,
தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் வடக்கு கிழக்கு என்னும் மாகாண தாயகத்தில் தமக்கு உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அனைத்து விதமான அரசியல் உரிமையையும் பெற்று சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க இரு தலைவர்களும் இணைந்து தங்கள் கட்சிகள் மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு உதவ வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் சார்பாகவும், இலங்கை இந்து மக்கள் சார்பாகவும் தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
இந்திய நாட்டின் ஆட்சி மாற்றம் ஈழ தமிழர்களின் வாழ்வியலில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்நாளை தங்களது வெற்றியால் இன்புறும் எம் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeo2.html
புலிக்கொடியோடு நினைவுகூருவதற்கே தடையாம்! பிரார்த்தனைகளில் ஈடுபடலாம் என்கிறார் வணிகசூரிய
[ சனிக்கிழமை, 17 மே 2014, 08:44.49 AM GMT ]
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடிகளை பயன்படுத்தி நினைவு கூரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பார்கள்.
பயங்கரவாதம் எந்தவிதத்தில் வந்தாலும் அது பயங்கரவாதம் தான் அதற்கு எந்தவகையிலும் அனுமதியளிக்க முடியாது யுத்த காலத்தில் உயிரிழந்த அனைவரும் ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் அல்ல.
எனினும் சிலர் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 18ம் திகதி அனுஷ்டிக்க முயற்சிக்கின்றனர். அதேபோன்று 18 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற வெற்றி விழா அணிவகுப்பானது இராணுவ வெற்றிக்கான கொண்டாட்டமும் அல்ல, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வெற்றி கொண்டமைக்கான கொண்டாட்டமும் அல்ல.
மாறாக வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்துவந்த மக்களுக்கு கிடைத்த வெற்றிக் கொண்டாட்டமாகும்.
இதனை வைத்துக் கொண்டு அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கின்றனர் வருடாந்தம் இடம்பெற்று வரும் வெற்றி விழா அணிவகுப்புக்கான அழைப்பிதழ்கள் பாதுகாப்புச் செயலாளரினாலேயே வழங்கப்படுகிறது.
இதனை வைத்துக் கொண்டு அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கின்றனர் வருடாந்தம் இடம்பெற்று வரும் வெற்றி விழா அணிவகுப்புக்கான அழைப்பிதழ்கள் பாதுகாப்புச் செயலாளரினாலேயே வழங்கப்படுகிறது.
இது அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுப்பது எமது பொறுப்பு அதில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பமாகும்.
மாறாக இதில் எந்த பலாத்காரமும் கிடையாது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை விரும்பாதவர்களே தமது குறுகிய அரசியல் இலாபம் கருதி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கின்றனர் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeo4.html
Geen opmerkingen:
Een reactie posten