அவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு நிறுவனத்தின் பிரதான அதிகாரி ரியர் அத்மிரல் மைக்கல் நுனன் மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் ஜயநாத் கொழம்பகே ஆகியோருக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை கொழும்பில் இன்று நடைபெற்றது.
கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மைக்கல் நுனன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தென் நடவடிக்கைகள் குறித்து விரிவுரை ஒன்றையும் ஆற்றியுள்ளார்.
கடற்படை நடவடிக்கை மற்றும் விமான கட்டுப்பாட்டு நிபுணரான மைக்கல் நுனன், 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேற்கொண்ட பணிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYko3.html
Geen opmerkingen:
Een reactie posten