தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

யாழ்ப்பான நடு வீதிகளில் துள்ளி விளையாடும் சாரதிகள்

யாழ்ப்பாணத்தின் வீதிகள் யுத்த காலத்தில் குன்றும் குழியுமாகவும், வாகனங்களைக் காணாமலும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தின் வீதிகள் யுத்த காலத்தில் குன்றும் குழியுமாகவும், வாகனங்களைக் காணாமலும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது வெளியிடத் தொடர்புகள் யாழ்.மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

யுத்த காலம் முடிவுற்று, யாழ்ப்பாணம் ஒரு நிம்மதியான சூழலுக்குள் நுழைந்திருக்கின்றது. இந்த நிம்மதியான சூழலில் மக்கள் தத்தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் தங்களுக்குள் தாங்கள் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதிக் கொள்கின்றனர்.
இதனால் வீதிகளின் புனரமைப்பு, வாகனங்களினால் மூடி மறைக்கப்படும் வீதிகள் என புழுதி படிந்து கிடந்த வீதிகள் எல்லாம் தற்போது பிஸியாகி விட்டன. அதை விட வீதிப் புனரமைப்பில் வீதிகளுக்கு வர்ணம் தீட்டும் வைபவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த வர்ணங்கள் வீதிகளைத் தன்வசப்படுத்தியுள்ள வாகனங்கள் விபத்தில் சிக்காது தப்பித்துக் கொள்வதற்காகவே.
ஆனால் இவ்விடயம் எங்கள் யாழ்ப்பாணத்து வாகனச் சாரதிகளுக்குத் தெரியாது. அதனால்தான் வீதிகளின் நடுவில் நின்று எங்கள் சாரதிகள் கிளித்தட்டு விளையாடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு முன்பான பரீட்சையில் சித்தி. வாகனம் செலுத்திக் காட்டுவதிலும் வெற்றி. ஆனால் பழக்கப்படாத வெள்ளைக் கோடும். வளைந்து நெழிந்து சென்று விசித்திரம் காட்டும் மஞ்சள் கோடும் எங்கள் சாரதிகளை நடு வீதியில் வைத்து கிளித்தட்டு விளையாட வைக்கின்றது. இது இவ்வாறு இருக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் வீதிச்சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் சத்திரச் சந்தியில் உள்ள வீதிச்சமிக்ஞைகள் ஒளிரும் போது எவரும் பயணிக்காமல் அப்படியே நிற்கின்ற மலாரடியைப் பார்த்த போது எங்கள் வாகனச் சாரதிகளின் திறமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆகவே சாரதி அனுமதிப் பத்திரம் இருந்தாலும் எங்கள் வீதியில் சாரதிகள் ஓடிப் பழகிய பழக்கதோசம் போக்க வீதி ஒழுங்கு முறைகள், வெள்ளை மஞ்சள் கோடுகளின் தத்துவங்கள், வீதிச்சமிக்ஞைகளின் நிற ஒளிர்வுகளின் தார்ப்பரியங்கள் என்பவற்றை கட்புல சாதனங்களின் உதவியுடன் எங்கள் வாகன சாரதிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதன் ஊடாகவே விபத்துக்களிலிருந்து யாழ்.மாவட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.Jaffna-RoadJaffna-Road-01Jaffna-Road-02

Geen opmerkingen:

Een reactie posten