தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

மீனவர்கள் விடுதலை! பாகிஸ்தான், இலங்கைத் தலைவர்களுக்கு மோடி வரவேற்பு

இந்திய மீனவர்களின் விடுதலையை பாரதத்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்பதாக தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞாயிற்றுக்கிழமை (25) உத்தரவிட்டார்.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இவ்வுத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கங்கள் எமது மீனர்வர்களை விடுவித்ததை வரவேற்கின்றேன்’ என அவர் தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நாளை (திங்கட்கிழமை) மாலை நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக அண்மை நாடுகளின் தலைவர்கள் உட்பட 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten