[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 06:41.33 AM GMT ]
அப்போது நடந்த கல்வீச்சில் பொலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். ஜீப் கண்ணாடி நொறுங்கியது. இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பெலிஸ் சிட்ரா குரூஸ் (வயது 72). கடந்த 10 ஆம் திகதி முடுக்கன்துறை பவானி ஆற்றின் கரையோரம் விறகு பொறுக்குவதற்காக சென்ற இவர் நிர்வாணமாக உடல் மீது பாறாங்கல் வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பெலிஸ் சிட்ரா குரூஸ் (வயது 72). கடந்த 10 ஆம் திகதி முடுக்கன்துறை பவானி ஆற்றின் கரையோரம் விறகு பொறுக்குவதற்காக சென்ற இவர் நிர்வாணமாக உடல் மீது பாறாங்கல் வைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானிசாகர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த சத்தியமங்கலம் துணை பொலிஸ் அத்தியட்சகர் மோகன் உத்தரவிட்டார். அதன் பேரில் பவானிசாகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மூதாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை தனிப்படையினர் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் முடுக்கன்துறையைச் சேர்ந்த பழனிசாமி மகன் ரமணீதரன் (22) என்பவர் பெலிஸ் சிட்ரா குரூசை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பொலிஸ் நேற்று மதியம் ரமணீதரனை கைது செய்தனர்.
ரமணீதரன் அளித்த வாக்குமூலத்தில், நானும் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து கடந்த 10 ஆம் திகதி முடுக்கன்துறை பவானி ஆற்றின் கரையோரம் கறி சமைத்து சாப்பிட்டு மது அருந்தினோம். பின்னர் நாங்கள் அனைவரும் தனித்தனியாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றோம். நான் காட்டுப்பகுதியில் சென்ற போது அங்கு பெலிஸ் சிட்ரா குரூஸ் விறகு பொறுக்கிக்கொண்டு இருந்தார்.
போதை தலைக்கேறிய நான் அவரை கற்பழிக்க முயன்றேன். அப்போது அவர் கூச்சல் போட்டார். மேலும் அவர் இதுகுறித்து வெளியில் சொல்லி விடுவாரோ? என்று பயந்து நான் அவரை கொலை செய்ய முடிவுசெய்தேன். உடனே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரின் உடலின் மேல் பெரிய கல்லை வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை 3 மணி அளவில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம்-பவானிசாகர் சந்திப்பு ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மூதாட்டி கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி மேட்டுப்பாளையம் வீதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ரோட்டில் ஏராளமான கற்களையும், முட்களையும் குவித்து வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் பொலிஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் பொலிஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வீதியில் குவித்து வைத்துள்ள கற்கள் மற்றும் முட்களை அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்களிடம் கூறினர். அதற்கு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரின் மகன் தம்பிராஜ் (23) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் தம்பிராஜை பொலிஸார் வாகனத்தில் ஏற்ற முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் ஜீப் மீது கல்வீசி தாக்கினர். இதில் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
ஜீப்புக்கு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரனுக்கும் காயங்கள் ஏற்பட்டன. உடனே பொலிஸார் நாகேந்திரனை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 12:53.50 AM GMT ]
தேவரூபன் என்ற குறித்த அகதி, கடந்த 6ம் திகதி மருத்து பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பதாகவும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் வைத்தியர்கள் கோரியுள்ளனர்.
எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9ம் திகதி அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த தகவலை திருச்சி காவற்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten