தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 mei 2014

வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தத் தடை: கவனம் செலுத்தப்படும் என்கிறது ஐ.நா


பாகிஸ்தான் உளவாளி: இலங்கையிலும் நாசம் ஏற்படுத்தப்படலாமென எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 03:36.55 AM GMT ]
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானிய உளவாளி என்று கூறப்படும் இலங்கையரான சகீர் ஹுசைன் தொடர்பில் இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஷுஹைர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அனுப்பி, கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
எம்.எம்.ஷுஹைர் முன்னர் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாகவும் தெஹ்ரானுக்கான தூதுவராகவும் பதவி வகித்தவராவார்.
இந்தநிலையில் அவர் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், சகீர் ஹுசைன் கைது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது அரசாங்கத்துக்கு அதனை ஆராய வேண்டிய கடமை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதும் இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும். இது நாட்டுக்கு பாதுகாப்பை தேடிக்கொடுக்கும் உத்தியாக இருக்கும்.
ஏற்கனவே அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் விக்கிலீக்ஸ் அறிக்கையிலும் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மகாபோதி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர் என்று இந்தியா சந்தேகம் வெளியிட்டிருந்தது.
எனவே இவ்வாறான சூழ்நிலையில் சகீர் ஹுசைனின் கைது மற்றும் அவர் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ளவேண்டியது இலங்கை அரசாங்கத்துக்கு அவசியமான ஒன்று என்றும் ஷுஹைர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையேல் ஹுசைன் போன்ற தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இலங்கையிலும் நாசங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தத் தடை: கவனம் செலுத்தப்படும் என்கிறது ஐ.நா
[ செவ்வாய்க்கிழமை, 13 மே 2014, 03:06.58 AM GMT ]
இறுதிப்போரின் போது இறந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் நடைபெற்ற போது, கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், அந்த தடை குறித்து தாம் அறியவில்லை. எனினும் அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கடந்த வாரம் விடுத்திருந்த எச்சரிக்கை ஒன்றில் போரில் இறந்தவர்களுக்காக பொதுநிகழ்வுகள் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
எனினும் தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்தலாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அரசாங்கம் போர் முடிவுக்கு வந்ததாக கூறும் மே 18 ஆம் திகதியன்று மாத்தறையில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten