தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 mei 2014

பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை!


யுத்த வெற்றியை கொண்டாட கூட்டமைப்பை அமைக்கும் கோட்டா

கூட்டமைப்பினருக்கு கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இன்று (திங்கட்கிழமை) அனுப்பப்பட்டுள்ள – மும்மொழிகளிலான அழைப்பிதழில்- “சுதந்திர நாட்டின் உரிமையை, சுதந்திர தேசத்தின் அழகினை, சுதந்திர உள்ளத்தின் மகிமையை இலங்கை நாட்டின் இளைய தலைமுறையினருக்கு மீட்டுத் தந்த வெற்றித் தருணத்தின் தளபதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு எதிர்வரும் மே 18ஆம் திகதி காலை 7.30 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க மாத்தறை நகருக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவந்த தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களைத் தோற்கடித்த மே 18 ஆம் திகதியை போர் வீரர்களின் தினமாக இலங்கை அரசு கொண்டாடி வருகின்றது. கடந்த 5 வருடங்களாக மே மாதத்தைப் போர் வீரர்களின் மாதமாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு இலங்கை அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் மாத்தறையில் இடம்பெறவுள்ளன.
இதற்குரிய ஏற்பாடுகள் யாவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் என்பனவும் இந்த வெற்றி விழாவில் இடம்பெறவுள்ளன. ஆனால், வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள், இறுதிப் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து பொது இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடத்துவதற்கு இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை

அளுத்தமவைச்சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள், வெலிப்பென்ன, மீகம என்னுமிடத்தில் வைத்து கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். அளுத்கம, தர்கா நகரில் விருந்தொன்றுக்குச் சென்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு திரும்பிக்கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten